அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

குப்பை எரிப்பு; ஓட்டிகள் அவதி: பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் பாலம் கீழே, குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதிகளவு சேர்ந்தவுடன், எரித்து விடுகின்றனர். பாலம் முழுவதும் புகையாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பகுதிவாசிகளும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மதியம், குப்பைக்கு தீ வைக்கப்பட்டதால், சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறிவிட்டது. அங்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டியது அவசியம்.
திறந்தநிலையில் மின்சாரபெட்டி: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் இருக்கும், மின்சாரபெட்டி நீண்ட நாட்களாக திறந்தநிலையில் உள்ளது. ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டுள்ளதால், குழந்தைகள் தொட்டால், மின்சாரம் பாய்ந்து, அசம்பாவிதம் ஏற்படும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. ஆகவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து, அதற்கு கதவு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விற்பனை சங்கத்தில் விளம்பர போஸ்டர்: நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடக்கிறது. அருகே பெட்ரோல் பங்க், கூட்டுறவு மருந்தகம் ஆகியவையும் உள்ளன. அந்த வளாக சுற்றுச்சுவர் முழுவதும், கூட்டுறவுத்துறை சார்பில், மக்கள் பயன் பெறும் திட்டங்கள் குறித்து தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த தகவல்களை மறைக்கும் வகையில், சினிமா, அரசியல் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஆபத்தான படியை இடம் மாற்றணும்! ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் அருகே, கோப்பணம்பாளையம் பஞ்சாயத்து, முனியக்கவுண்டம்பாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ?உள்ளது. இதை சுத்தப்படுத்தும் வசதிக்காக, இரும்பு படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அது, சாலையோரத்தில் இருப்பதால், எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது, அதன் மீது மோதி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. படியை மாற்றி, சாலையின் பக்கவாட்டு பகுதியில் பொருத்தினால், விபத்துகளை தவிர்க்கலாம்.

சாலையோர மண் சமன்படுத்தணும்! நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அரியாகவுண்டம்பட்டி ஏரிக்கரையை பலப்படுத்த, அகலப்படுத்த கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதையொட்டியுள்ள பள்ளமான பகுதிக்கு மண் கொட்டப்பட்டது. பல இடங்களில், சாலைக்கு சமமாக, மண்ணை கொட்டியுள்ளனர். பல இடங்களில், சாலையோரம் குவித்துள்ளனர். போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. பள்ளி, கல்லூரி பஸ்கள், இவ்வழியே செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை