மக்காச்சோளம் காப்பீடு இன்று கடைசி நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் காப்பீடு இன்று கடைசி நாள்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமகிரிப்பேட்டை: 'மக்காச்சோளம், உளுந்து பயிர் காப்பீடு செய்ய, இன்றே கடைசி நாள்' என, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு ராபி பருவத்தில் சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்த மழை இல்லாததால், மகசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிலிருந்து தப்பிக்க பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம். விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையம் ஆகிய ஏதாவது ஒன்றில், பிரீமியத் தொகையை செலுத்தலாம். ஏக்கருக்கு, சோளத்திற்கு, 194; மக்காச்சோளத்திற்கு, 316; உளுந்துக்கு, 195; நிலக்கடலைக்கு, 319 ரூபாய் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை