நாமக்கல் ஆர்.சி., சர்ச்சில் சாம்பல் புதன் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் ஆர்.சி., சர்ச்சில் சாம்பல் புதன் வழிபாடு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல், ஆர்.சி., சர்ச்சில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் - திருச்சி சாலை, கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார். இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முன், அவரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மக்கள், குருத்து ஓலைகளை ஏந்தி, அவரை பின் தொடர்ந்தனர். இது, குருத்தோலை ஞாயிறு என அனுசரிக்கப்படுகிறது. இயேசு கல்வாரி மலை மீது இழுத்துச்செல்லப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு, இறந்தார். அவரது நினைவு நாளில் எடுத்து வந்த குருத்து ஓலைகள், பங்குத்தந்தையால், ஆசீர்வதிக்கப்படும். அவை, சாம்பல் புதனன்று, தேவாலயத்தில் சேகரிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தி சாம்பல் ஆக்குவர். சாம்பல் புதன் நாளன்று பிராத்தனையின் போது, பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சாம்பல் கொண்டு, சிலுவை அடையாளம் வரைவார். அதேபோல், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பலியில் பங்ககேற்றவர்களுக்கு பங்குத்தந்தை பிரான்சிஸ், நெற்றியில் சாம்பலில் சிலுவை இட்டார். இது, தவக்காலத்தின் துவக்க நாள் ஆகும். தொடர்ந்து, 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X