குழந்தையுடன் வழிதவறிய பெண்; பஸ் ஏற்றி விட்ட போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் வழிதவறிய பெண்; பஸ் ஏற்றி விட்ட போலீசார்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: கைக்குழந்தையுடன் வழி தவறிய, வடமாநில பெண்ணை மீட்டு, போலீசார் அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் அடுத்த, காவேரி பகுதியில், நான்கு நாட்களாக, 40 வயது மதிக்கத்தக்க, வடமாநில பெண் சுற்றிக் கொண்டிருந்தார். அவருடன், கைக்குழந்தையும் இருந்தது. அப்பகுதி மக்கள் விசாரித்த போது, இந்தியில் பேசியுள்ளார். சாலையோரத்தில் இருந்தவருக்கு, பகுதிவாசிகள் உணவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து, நேற்று பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், பெண்ணிடம் விசாரித்தபோது, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, உறவினர்கள் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர், பஸ்சில் ஏற்றிய போலீசார், 'ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விடுங்கள்; வேறு எங்கேயும் இறக்கி விட வேண்டாம்' என, நடத்துனரிடம் கூறி, குழந்தையுடன் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை