17ல் அரசு பள்ளி 125ம் ஆண்டு விழா: அமைச்சர்கள் 4 பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17ல் அரசு பள்ளி 125ம் ஆண்டு விழா: அமைச்சர்கள் 4 பேர் பங்கேற்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: வரும், 17ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 125ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1891, ஆக., 1ல் துவங்கப்பட்டது. இப்பள்ளி, 22 ஏக்கரில் அமைந்துள்ளதுடன், மாவட்டத்தின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தையும் கொண்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் வரைந்த கோபாலகிருஷ்ண கோகலே படம், பள்ளியின் சென்டர் ஹாலில் கம்பீராக உள்ளது. பள்ளியின், 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட கலையரங்கம்; எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்பது லட்சம் ரூபாயில், நுழைவு வாயில்; எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாயில், பேவர் பிளாக் பாதை; புதுப்பிக்கப்பட்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. விழா, வரும், 17ல் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகிக்கிறார். கலையரங்கை, அமைச்சர் செங்கோட்டையன்; அலங்கார நுழைவு வாயிலை, அமைச்சர் தங்கமணி; சத்துணவு உணவு அறையை, அமைச்சர் சரோஜா; புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டடத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர், நடைபாதையை, எம்.பி., சுந்தரம்; விழா மேடையை, எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். ஏற்பாடுகளை, விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை