வீணாகும் குடிநீர் குழாய் பயன்பாட்டிற்கு வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் குடிநீர் குழாய் பயன்பாட்டிற்கு வருமா?

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: தாஜ்நகரில், குடிநீர் குழாய் பயன்பாடு இல்லாமல் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. பள்ளிபாளையம், ஊராட்சிக்குட்பட்ட தாஜ்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, சாலையோரத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா உள்ள இடத்தின் அருகே, ஒரு குடிநீர் குழாய் பயன்பாடின்றி, துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. மேலும், சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக, காட்சிப் பொருளாகவே உள்ளது. ஏற்கனவே, இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைகாலம் தொடங்கினால், குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குழாயை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை