புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அச்சுறுத்தும் நாய்களால் அவதி: புலியூர் பகுதியில், தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சத்தோடு செல்கின்றனர். பெண்கள் முதியவர்கள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையும் மோசமாக சேதமடைந்துள்ளது. நாய் துரத்துவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள், சேதமான சாலையால் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தெருநாய்களின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
- ஏ.சர்மிளாபானு, புலியூர்.

மீன் கடைகளால் தொல்லை: கரூர் அருகே, வெங்கமேட்டில், சாலையோரங்களில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடைகளில் மீன் வறுக்கும்போது, காற்றில் மிளகாய், மசாலா பொடிகள் பரவுகின்றன. அவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்களில் படுகின்றன. இதனால், தூள் விழுந்து, தடுமாறி விழும் நிலைக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் மோதி, விபத்தில் சிக்குவதும் நடக்கிறது.
- பி.சக்திவேல், வாங்கபாளையம்



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை