கலாசார ஓவியங்களுடன் புதுப்பொலிவு: கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலாசார ஓவியங்களுடன் புதுப்பொலிவு: கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அசத்தல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், தென்னக ரயில்வே மேலாளர் குல்ஷெர்தா இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து, ரயில்வே ஸ்டேஷனில், கலாசார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஈரோட்டில் இருந்து, கரூர் வழியாக திருச்சி வரை, ரயில் வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. பாதுகாப்பு ஆணையர் மனோகரன், சமீபத்தில் ஆய்வு செய்து, ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இந்நிலையில், தென்னக ரயில்வே மேலாளர் குல்ஷெர்தா, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், மின் பாதை பணிகளை இன்று ஆய்வு செய்ய உள்ளார். அவர் வருகையொட்டி, ரயில்வே ஸ்டேஷனில் அவசர சிகிச்சைப் பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் கவுன்டர், வரவேற்பு அறை உள்ள இடத்தில், தமிழக கலாசாரத்தை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில், சேவற்சண்டை, ஜல்லிக்கட்டு ஓவியங்கள் பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை