பாம்பலாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து தாலி திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பலாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து தாலி திருட்டு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: கண்டியூர் பாம்பலாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து, சுவாமி கழுத்தில் இருந்த ஆறு தாலிகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வதியம் பஞ்., கண்டியூர் கிராமத்தில், வயல்களின் நடுவே பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஐம்பொன்னால் ஆன பாம்பலாயி அம்மன், விநாயகர் சுவாமி சிலைகள் மற்றும் திருவாச்சி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம ஆசாமிகள் கோவிலை ஒட்டியுள்ள மரத்தில் ஏறி, மடைப்பள்ளி வழியாக சென்று, கோவில் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். தொடர்ந்து சுவாமி கருவறை முன் பெரிய கதவிலிருந்த பூட்டை கடப்பாரையால் உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த ஆறு தாலிகளை திருடிக் கொண்டு, தப்பிச் சென்றனர். வரகூர் கிராமத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மணிவாசகம், நேற்று காலை, 10:00 மணியளவில், கோவில் முன் கதவை திறந்தபோது, உண்டியல் மற்றும் கருவறை கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர். இதில் ஐந்து தாலிகள் ஒவ்வொன்றும் ஒரு கிராம் அளவிலும், ஒரு தாலி இரண்டு கிராம் அளவிலும் உள்ளதாகும். இவை, வேண்டுதலுக்காக சுவாமிக்கு பக்தர்கள் அளித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை