அமைப்பியல் துறை பயிலரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பியல் துறை பயிலரங்கம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் அமைப்பியல் துறை சார்பில், கான்கிரீட்டா'18 என்ற தலைப்பில், இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது. முதல் நாள் விழாவில், கல்லூரி முதல்வர் கவிதா, துறைத்தலைவர் மகாதேவன் மற்றும் சிறப்பு விருந்தினராக, ராம்ஜி பில்டிங் புரோமோட்டர் நிர்வாக இயக்குனர் ராமகணேசன் பங்கேற்றனர். கவுரவ விருந்தினராக டில்லியில் உள்ள தேசிய எல்லை பாதுப்புப் படை ஆய்வாளர் மோகன் பங்கேற்றார். இவ்விழாவில், 500க்கும் மேற்பட்ட தமிழக, ஆந்திர, கர்நாடக மாநில பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறை நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாள் நிகழ்வில், ஆராய்ச்சி கட்டுரை விளக்க உரை, வரைபட திறன் (மென்பொருள் மூலம்), தொழில்நுட்ப விநாடி - வினா, மாதிரி வடிவமைப்பு (செயல் முறையில்) மற்றும் ஸ்பார்ட் ஈவன்ட் என்னும் தலைப்பில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில், மென்பொருள் மற்றும் வன்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டிகளை, அமைப்பியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை