அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 15, 2018
Advertisement

பாதாள சாக்கடை பள்ளத்தால் விபத்து: கரூர் நகராட்சி அலுவலகம் சாலையில், பாதாள சாக்கடை சரிசெய்ய பல இடங்களில் பள்ளம் தோண்டப்படுகிறது. ஆனால், அவை சரியாக மூடப்படுவதில்லை. இதனால், இரவு நேரத்தில் அப்பகுதி வழியாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், விழுந்து காயம் அடைகின்றனர். மேலும், சாலை பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உரிய நேரத்துக்கு அலுவலகம், பணியிடங்களுக்கு செல்ல முடிவதில்லை. நகராட்சி அலுவலகம் எதிரிலேயே சாலை பள்ளமாக உள்ளது.
பொதுக் கழிப்பறை முற்றிலும் சேதம்: கரூர் அருகே, நரிக்கட்டியூரில், பொதுக் கழிப்பறை சேதமடைந்து, மக்கள் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டிய நிலையில் காணப்படுகிறது. நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின், கழிப்பறை கேட்பாறற்று இருப்பதால், முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. ஏற்கனவே உள்ள கழிப்பறையை சீரமைத்தால், மக்கள் சிரமம் தீரும். நடவடிக்கை எடுப்பார்களா?

சுற்றுச்சுவர் ஓரம் சுகாதார சீர்கேடு: கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இந்த அலுவலக சுற்றுச்சுவர் ஓரங்கள், திறந்தவெளி கழிப்பறையாக மாறி வருகிறது. இங்கு, அசுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது, அலுவலக பணியாளர்களும் துர்நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, மக்கள் தவிக்கின்றனர். அலுவலகம் சுற்றி உள்ள பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
தாழ்வாய் உள்ள மின் பெட்டி: கரூர் வடக்கு காந்திகிராமம், கிருஷ்ணாநகர் இரண்டாவது தெருவில், தாழ்வான நிலையில், மின்சார பெட்டி உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், மின் பெட்டி கதவுகள் திறந்து கிடக்கிறது. இதன் ஒயர்கள் வெளியில் தொங்கியபடி உள்ளது. அதை சிறுவர்கள் தொட்டு விட வாய்ப்புள்ளது. இதுகுறித்து, புகார் தெரிவித்தும், மின்வாரிய துறையினர் கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு கருதி, மின் பெட்டியை, உயரமான இடத்தில் வைத்து, பூட்டி வைக்க வேண்டும்.

பாலம் சாலையில் உடைந்த திறப்பு: கரூர் வடக்கு மடவளாகம் முனியப்பன் கோவில் தெருவில் உள்ள பாலத்தில், மழைக் காலத்தில் நீர் அடைப்பு ஏற்பட்டால், இறங்கி சரிசெய்யும் வகையில், அதன் நடுவில் ஜன்னல் போன்ற திறப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்லும் போது, அழுத்தம் காரணமாக திறப்பு கதவு சேதமடைந்துள்ளது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள், தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே, பாலம் நடுவே உள்ள திறப்பை சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X