தொண்டர்கள் மன உறுதியால் அ.தி.மு.க., நிலைத்து நிற்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டர்கள் மன உறுதியால் அ.தி.மு.க., நிலைத்து நிற்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''ஒன்றரை கோடி தொண்டர்களின் மன உறுதியால் தான், பல சோதனைகளுக்கு பிறகும், அ.தி.மு.க., நிலைத்து நிற்கிறது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அ.தி.மு.க., செய லாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது: அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அமைக்கப் பட்டுள்ள குழுவோடு, நிர்வாகிகள் சேர்ந்து செயல்பட வேண்டும். தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்பட்ட நிகழ்ச்சி, வரலாற்று சிறப்பானது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் அறிமுகப்படுத்திய, காப்பீடு திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் வீடு கட்டி தரும் திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க., வுக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. அதில் இருந்து அ.தி.மு.க., மீண்டு நிலைத்து நிற்க காரணம், ஒன்றரை கோடி தொண்டர்களின் மன உறுதியும், கட்டுபாடுகள் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். தொண்டர்களை நிர்வாகிகள் அரவணைத்து செல்ல வேண்டும். வரும், 24ல் ஜெயலலிதா பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைப்பு செயலாளர் பாப்பா சுந்தரம், ஜெ., பேரவை செயலாளர் காமராஜ், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை