சுகாதார மையங்களில் டாக்டர்கள் தங்கி சிகிச்சையளிக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார மையங்களில் டாக்டர்கள் தங்கி சிகிச்சையளிக்க கோரிக்கை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: ஆரம்ப சுகாதார மையத்தில், டாக்டர்கள் தங்கி, மருத்துவ பணி செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அடுத்த இனுங்கூர், தோகைமலை மற்றும் பஞ்சப்பட்டி வட்டார மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களின் கீழ் செயல்படும் சுகாதார மையங்களில், டாக்டர்கள் இரவு நேரத்தில் தங்குவதில்லை. பகல், 12:00 மணிக்கு மேல், புறநோயாளிகள் மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால், எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்பு குறித்து வரும் பொதுமக்களுக்கு, சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில், சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு டாக்டர்கள் இல்லாததால், இரவு நேரத்தில், மக்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏராளமானோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆரம்ப சுகாதார மையம் மற்றும் துணை சுகாதார மையங்களில், டாக்டர்கள், செவிலியர்கள் தங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை