பல்கலை முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரிக்கணும்: நல்லசாமி கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரிக்கணும்: நல்லசாமி கோரிக்கை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''பல்கலைகழகங்களில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்தார். கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாயப்பட்டறைகளில், சுத்திகரிப்பு நிலையங்கள், காட்சிப் பொருட்களாக உள்ளன. மாசு கட்டுப்பாடு வாரியம், காசு கட்டுப்பாடு வாரியமாக மாறிவிட்டது. தமிழத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ கொண்ட ஒரு சிப்பத்துக்கு, 25 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். இதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை, போக்குவரத்து வசதிகள் உள்ள கரூரில் அமைக்க வேண்டும். காவிரியில் நாள்தோறும் தண்ணீர் விட வேண்டும் என, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீரா பானம் இறக்க, அரசு விதித்துள்ள நிபந்தனைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். பல்கலை கழக முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை