Punjab National Bank Scam: Sources Say Nirav Modi Has Left India | வங்கி மோசடி: வைர வியாபாரி வெளிநாட்டிற்கு ஓட்டம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கி மோசடி: வைர வியாபாரி வெளிநாட்டிற்கு ஓட்டம்?

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (251)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பஞ்சாப் நேஷனல் வங்கி, நிரவ் மோடி மோசடி, வைர வியாபாரி , மும்பை வங்கி மோசடி,  டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் , நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ,Punjab National Bank, Nirav Modi fraud, bank fraud, Diamond merchant, Mumbai bank fraud, Diamond R U.S.,
Solar Exports, Stellar Diamond, Nishal Modi, Amiv Nirav Modi, 
Megul Sinuabai Soksy, வங்கி மோசடி , 

PNB Scam,

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,360 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.


விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கி உயரதிகாரிகள், மும்பை, பரோடியில் உள்ள வங்கி கிளையில், 5ம் தேதி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கி அதிகாரிகளான, கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் ஹனுமந்த் கராட் ஆகியோர், சில வாடிக்கையாளர்களுக்கு, ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்தது தெரிந்தது. இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.இந்நிலையில், சி.பி.ஐ., மேற்கொண்டு நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, 'மெகா' மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

PNB ஊழல்: நிரவ் மோடி ஓட்டம்


சோதனை

இந்நிலையில், நிரவ் மோடி மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மும்பையில் உள்ள நிரவ் மோடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவர் வீட்டில் இல்லை.

தொடர்ந்து, மும்பை மற்றும் வோர்லியில் உள்ள நிரவ் மோடி வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.


ஓட்டம்

இதனிடையே, இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (251)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praveen - nellai,இந்தியா
16-மார்-201807:36:07 IST Report Abuse
praveen அனைவரும் இனி வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்வதை தவிர்த்து இடம் மற்றும் வேறு வகையை கையாளவேண்டும் நம் சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் லோ லோ என்று லோனாகி கொள்ளையர்கள் நகை வியாபாரி என்ற பெயரில் சூறையாடுகின்றனர் அனைத்து நகை கடை உரிமையாளர்களும் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு நகை ஒழுங்கு வாரியம் அமைத்து டெண்டர் முறைகள் முன் டெபாசிட் செய்து நகை கடை உரிமம் வழங்கினால் இந்த மாதிரி திருட்டை தவிர்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
Asvin Raj - Periyakulam,இந்தியா
20-பிப்-201817:00:01 IST Report Abuse
Asvin Raj சாமானிய மக்கள் பாங்கில் லோன் வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டும் வாங்க முடியாது , அப்படியே வாங்கினாலேயும் அதற்கு அடமானமாக கேட்கிறார்கள் , குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை செலுத்தவில்லையென்றால் அவர்கள் படுகின்ற துன்ப ,துயரங்கள் சொல்லிமாளாது ஆனால் இந்த பணக்கார முதலைகளுக்கு மட்டும் மிகவும் ஈசியாக கோடிக்கணக்கான ரூபாய் கடனாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து கிடைத்துவிடுகிறது , அவர்களும் வாங்கி ஏப்பம் விடுகின்றனர் . இது யார் தவறு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தவறா? அரசில்வாதிகள் தவறா ? இதையலாம் கண்டும் ,காணாமல் இருக்கும் மக்களின் தவறா ? இது ஜனநாயக நாடு
Rate this:
Share this comment
Cancel
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201811:04:01 IST Report Abuse
Malimar Nagore ஓடி ஓடி உழைக்கணும்.
Rate this:
Share this comment
Mano - Madurai,இந்தியா
21-பிப்-201819:35:23 IST Report Abuse
Manoமோடிக்கெல்லாம் கொடுக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
18-பிப்-201810:42:42 IST Report Abuse
Syed Syed கோடி கோடி யா கொள்ளை அடிக்க விட்டுட்டு விவசாயிகளுக்கு .....
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-பிப்-201815:15:18 IST Report Abuse
pradeesh parthasarathy மத்திய அரசுக்கு தெரியாமல் இவர் எப்படி வெளிநாடு தப்பி சென்றார் ..... அரசுக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் ....மத்திய அரசு தான் முழு பொறுப்பு....
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
17-பிப்-201804:49:25 IST Report Abuse
B.s. Pillai When Chidambaram was External affairs minister, he tried to black mail Lalit Modi by refusing protection to the cricket players, by saying the lok sabha elections are coming. He escaped to South Africa and conducted his IPL there. India lost crores of foreign exchange and income. These people who go against the law of the land are always ready with an escape route plan and escapes when the air becomes hot. The CBI and other law enforcing agencies must block aerodromes First and then initiate action against these criminals. Modi eradicated corruption in South Block, but all other Govt staff who enjoyed corruption still on duty. When I cam from Sydney, the custom officer demanded money saying I can not carry apple I phone as well as apple IPad in Nov, 2015 .( After Modi Govt. in rule ) I refused to pay and told him to take away the IPAD but issue me a receipt. I know how to fight and get it back. Then he just showed me out door. Still corruption in customs is rampant.So it becomes easy for these people to escape.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-பிப்-201805:04:53 IST Report Abuse
AnandanYou do not talk about present bad situation. Shame....
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
16-பிப்-201818:43:15 IST Report Abuse
I love Bharatham ரஜினி சொல்வது போல் ....எதிர் மறை யாகவே சிந்திக்கிறோம்.....மோடி யை விமர் சிக்க வேண்டும் என்றே ஒரு மாபெரும் கோட்டம் இருக்கிறது........... நல்லது எங்கே நடந்தாலும் ....பாராட்ட கற்று கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
17-பிப்-201810:47:14 IST Report Abuse
Anandanகாங்கிரஸ் செய்தால் திட்டனும் மோடி செய்தால் பாராட்டணுமா?...
Rate this:
Share this comment
Cancel
Suguna - Chennai,இந்தியா
16-பிப்-201810:43:56 IST Report Abuse
Suguna காங்கிரஸ் தப்பு செய்ததால் மக்கள் தண்டித்தார்கள். இப்போது மோடியும் தப்பு செய்கிறார். மக்கள் தண்டிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. காங்கிரஸ் சரியில்லை என்று தானே இவர்களை கொண்டு vandhom. இவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டியது தானே அதை விட்டு தப்பிக்க விட்டு, நமது வரி பணம் எவ்வளவு செலவு செய்யவேண்டி உள்ளது அந்த வீனா போன மல்லையாவுக்கு அவனை இந்தியா கொண்டுவர கேஸ் போட்டு செலவு செய்து கொண்டு இருக்கிறார் மோடி. panakkaranukku மட்டுமேயான நாடாக இந்தியா எப்போதோ மாறிவிட்டது. காங்கிரெஸ்ஸே பரவாயில்லை என்று akkividuvar போல இந்த மோடி. எதுக்கு எடுத்தாலும் காங்கிரேஸ்ஸ குறை சொல்வதை விட்டு நம்பி வோட் போட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்ய சொல்லுங்க இருக்குற ஒரு வருஷத்துல
Rate this:
Share this comment
Cancel
IloveIndia - Chennai,இந்தியா
16-பிப்-201810:34:57 IST Report Abuse
IloveIndia TWO wrongs do not make an action right. Nobody is justifying Anderson escape. we are only asking as to how these people could escape when the Govt. has all authorities under its control. Can't the Govt. take action to stop the accused from travelling out of India? It is very funny to see the people pretending innocence that they know nothing about the incident when in 2017, already case was registered against accused by DRI.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
16-பிப்-201807:45:59 IST Report Abuse
spr பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகள் வெளியானபின், நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால், ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. - அவ்வளவுதான் வழக்கு முடிஞ்சு போச்சு குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்கிறோம் இந்த வழக்குக்கான செலவை சி பி ஐ தரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை