2 ஆண்டுக்கு பின் ஈரோடு மாவட்டத்தில் 16 நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டுக்கு பின் ஈரோடு மாவட்டத்தில் 16 நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஈரோடு மாவட்டத்தில், 16 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி பாசன வாய்க்கால்கள் மூலமாக நெல், கரும்பு, மஞ்சள, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தாண்டு, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் துவங்கியுள்ளது. இதனால் முதற்கட்டமாக கடந்த, 8 ல் காசிபாளையம், அத்தாணி, ஏளூர், கள்ளிப்பட்டி, என்.ஜி.பாளையம், புதுவள்ளியம்பாளையம், டி.என்.பாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. பின்னர், கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட அவல்பூந்துறை, கே.ஜி.வலசு, எழுமாத்தூர், பி.மேட்டுப்பாளையம், பெரியபுலியூர் ஆகிய பகுதிகளிலும், கொடிவேரி பாசனத்தில் புதுக்கரைபுதூர், கூகலார் ஆகிய ஏழு இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. நேற்று கரட்டடிபாளையம், உக்கரம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 16 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சன்னரக நெல் கிலோ, 16.60 ரூபாய், மோட்டா ரக நெல், 16 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 45 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டகளாக, வறட்சியால் நெல் சாகுபடி செய்யப்படவில்லை. இந்தாண்டு ஓரளவு மழை, பவானிசாகர் அணை நீர் கைகொடுத்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 140 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை