பெருந்துறையில் ரூ.1.95 கோடிக்கு கொப்பரை ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறையில் ரூ.1.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெருந்துறை: பெருந்துறையில் நடந்த கொப்பரை ஏலத்தில், 1.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடக்கும். நேற்று நடந்த ஏலத்திற்கு, 3,858 மூட்டை கொப்பரைத் தேங்காய் வரத்தாகின. இதில், 3,177 மூட்டை விற்பனையாகின. முதல் தரம் கொப்பரைத் தேங்காய், ஒரு கிலோ, 126.50 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 141.25 ரூபாய் வரை, சராசரியாக, 136.70 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கொப்பரைத் தேங்காய், 50.65 ரூபாய் முதல், 128.85 ரூபாய் வரை, சராசரியாக, 112.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. கொப்பரை விலை, 1.10 ரூபாய் வரை குறைந்தது. அதேபோல், வரத்து, சென்ற ஏலத்தை விட, 25 ஆயிரம் கிலோ குறைந்தது. மொத்தம், 1 கோடியே, 95 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை