குட்டி யானைக்கு சிகிச்சை; உடல்நிலையில் முன்னேற்றம்: ஒத்துழைப்பு கொடுக்கும் தாய் யானையால் ஆச்சர்யம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குட்டி யானைக்கு சிகிச்சை; உடல்நிலையில் முன்னேற்றம்: ஒத்துழைப்பு கொடுக்கும் தாய் யானையால் ஆச்சர்யம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில், உடல்நலம் குன்றிய குட்டி யானைக்கு, இரண்டாவது நாளாக நேற்றும் சிகிச்சையளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில், கரளியம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், 48. இவரது தோட்டத்தில், நான்கு வயது குட்டி யானை ஒன்று, கடந்த, 13 முதல் படுத்து கிடந்தது. வனத்துறையினர் பார்த்தபோது, நடக்க முடியாத நிலையில் குட்டியானை இருந்தது. அருகில் இருந்த தாய் யானை, யாரையும் நெருங்க விடாமல், துரத்தியது. கிராம மக்களுடன், வனத்துறையினர் பட்டாசு வெடித்து, தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையில், இரண்டு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், தாய் யானை அவ்வப்போது வந்து, குட்டியானையை பார்த்து விட்டு செல்வது, வனத்துறையினரை மட்டுமின்றி, கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து, கால்நடை மருத்துவர் அசோகன் கூறியதாவது: குட்டியானை வலதுபுறம் உள்ள, நான்கு பற்கள் உடைந்து, சதையும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், குட்டியானை கடந்த, 15 நாட்களாக எந்தவித உணவும் எடுத்து கொள்ளாததால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டு வரும், சிகிச்சையால் உடல்நிலை தேறி வருகிறது. நேற்று இரவு, தாய் யானை இன்னும் இரண்டு யானைகளுடன், வந்து குட்டியானையை பார்த்து விட்டு சென்றது. அவ்வப்போது வந்து, குட்டியின் உடல்நிலை குறித்து, மனிதர்களை போல் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளதோடு, சிகிச்சைக்கு எந்தவித இடையூறுமின்றி, தாய் யானை ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. சிகிச்சைக்கு பிறகு, காலையில் இரண்டு லிட்டர் பால், ரொட்டி சாப்பிட்டுள்ளது. இன்று மாலைக்குள், உடல்நிலை முழுவதும் குணமடைந்து, வனப்பகுதிக்குள் தாயுடன் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை