கவுந்தப்பாடியில் மகன் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்ததில் தாயின் விரல்கள் துண்டானது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுந்தப்பாடியில் மகன் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்ததில் தாயின் விரல்கள் துண்டானது

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: மகன் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்து, கவுந்தப்பாடி அருகே தச்சுதொழிலாளியின் மனைவியின், இடது கை விரல்கள் துண்டானது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, கோட்டாம்பாளையம் அருகே ஜீவா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 50, தச்சு தொழிலாளி. இவரது மனைவி செல்வி, 46. இவர்களுக்கு மணிமேகலா, 14, என்ற மகளும், மணிகண்டன், 12 என்ற மகனும் உள்ளனர். கவுந்தப்பாடி அருகே சேவாக்கவுண்டனூர், பஞ்.,யூனியன் நடுநிலைப்பள்ளியில், மணிகண்டன் ஏழாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 12ல், மணிகண்டன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒயர் இணைப்புடன், தாயத்து போன்று மர்ம பொருள் ஒன்று வழியில் கிடந்துள்ளது. அதை எடுத்த மணிகண்டன், வகுப்பறையில் தான் அமரும் மேஜைக்கு அடியில் வைத்திருந்தான். இதை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்தனர். பின்னர் ஆசிரியர்கள், மணிகண்டனின் தாய் செல்வியை வரவழைத்து, அந்த மர்ம பொருளை கொடுத்து அனுப்பினர். ஒயர் இணைப்புடன் இருந்த மர்ம பொருளை, வீட்டுக்கு வெளியே இருந்த குப்பையில் போட்டு, நேற்று முன்தினம் மதியம், 1:30 மணியளவில் செல்வி தீ வைத்தார். அப்போது அந்த பொருள் வெடித்ததில், செல்வியின் இடது கை பெருவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவை துண்டானது. அருகில் நின்றிருந்த செல்வியின் மகள், மணிமேகலாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த செல்வி, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பையில் இருந்து வெடித்து சிதறிய பொருட்களை, கவுந்தப்பாடி போலீசார் சேகரித்துள்ளனர். குப்பைக்குள் வெடித்தது ஜெலட்டின் குச்சிகளா அல்லது கிணறு தோண்ட பயன்படும் தோட்டாக்களா என, போலீசார் விசாரிக்கின்றனர். இதை உறுதி செய்ய, சேகரித்த தடயங்களை, சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X