ஓடும்போது இறங்கியதால் விபரீதம்: ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும்போது இறங்கியதால் விபரீதம்: ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஓடும் ரயிலில் இருந்து, கீழே இறங்கிய கல்லூரி மாணவர், தடுமாறி விழுந்ததில் பலியானார். ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், டெய்லர் கடை வைத்துள்ளார். இவர் மகன் கவுரவ் குமார், 19; வேலூர், வி.ஐ.டி., இன்ஜினியரிங் கல்லூரியில், இ.சி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று சென்னையில் இருந்து, கோவை செல்லும், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் ஏறி உள்ளார். நேற்று மதியம், 12:10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் எண் இரண்டில், மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது கவுரவ்குமார், ஓடும் ரயிலில் இருந்து இறங்கி உள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி, பலியானார். 50 அடி தூரம் வரை, உடலை ரயில் இழுத்துச் சென்றுள்ளது. ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை