மின் கம்பி உரசியதால் தீ: லாரி, பொக்லைன் இயந்திரம் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பி உரசியதால் தீ: லாரி, பொக்லைன் இயந்திரம் சேதம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வெள்ளியணை அருகே, மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து, லாரி, பொக்லைன் இயந்திரம் சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புதூரைச் சேர்ந்தவர் கார்த்தி, 43, இவர், கரூரை சேர்ந்த பூபதி என்பவரிடம், பழைய பொக்லைன் வாகனத்தை விலைக்கு வாங்கினார். நேற்று முன்தினம் இயந்திரத்தை லாரியில் ஏற்றி, திருநெல்வேலிக்கு அனுப்பினார். லாரியை, திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த சரவணகுமார், 27, ஓட்டிச் சென்றார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றால், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என, கருதிய சரவணகுமார், லாரியை வெள்ளியணை வழியாக ஓட்டிச் சென்றார். குழிக்கல்பாறை அருகே, மாலை, 6:30 மணியளவில், லாரியில் ஏற்றப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தில் மின் கம்பி உரசி தீப்பிடித்தது. தீயைக் கண்ட சரவணன், லாரியில் இருந்து குதித்து, தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், இரண்டு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X