குடிபோதை கணவனை அழைத்துச் செல்ல பெண்களுக்கு ஸ்கூட்டர்: குஷ்பூ கிண்டல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிபோதை கணவனை அழைத்துச் செல்ல பெண்களுக்கு ஸ்கூட்டர்: குஷ்பூ கிண்டல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''குடிபோதையில் உள்ள கணவர்களை அழைத்துச் செல்லவே, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது,'' என, நடிகை குஷ்பூ பேசினார்.
தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து, கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் பொதுக்கூட்டம் நடந்தது. காங்., செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ பேசியதாவது: கடந்த, 2011 - 16 ஆண்டுகளில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, எந்த திட்டமும் நடக்கவில்லை. 2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களில், ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் இறந்த பிறகு, முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியது. கடந்த, ஏழு ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், ஆண்களுக்கு குவார்ட்டர் தந்தனர். தற்போது, பெண்களுக்கு ஸ்கூட்டர் தர உள்ளனர். குடிபோதையில் உள்ள கணவர்களை, பாதுகாப்பாக அழைத்து செல்லவே, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது கண் துடைப்பு நாடகம். ராகுல் பிரதமராகவும், ஸ்டாலின் முதல்வராகவும் வந்தால், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் நிச்சயம் வரும். தமிழகத்தில் காவி நிறத்தை கொண்டு வர, பா.ஜ., முயற்சிக்கிறது. தமிழகத்துக்கு என்றும் பயன் தரும் ஒரே நிறம், சுய மரியாதை தான். வரும் தேர்தல்களில், பொதுமக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X