பைக் மீது லாரி மோதல்: தாய், மகள் பரிதாப பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது லாரி மோதல்: தாய், மகள் பரிதாப பலி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் இறந்தனர். வேலூர் மாவட்டம் சின்னகசிநாயக்கனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண், 32. இவரது மனைவி பிரியா, 23. இவர்களது மகள்கள் சஞ்சனா, 6, தனுஸ்ரீ, 2. கிருஷ்ணகிரியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் அருண் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பல்சர் பைக்கில் அருண், பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன், கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு வந்தனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, இரவு, 10:30 மணியளவில் பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பர்கூர்-திருப்பத்தூர் சாலையில், பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், அருண் உட்பட நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். பிரியா, தனுஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த அருண், சஞ்சனாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X