பட்டா மாறுதல் செய்ய லஞ்சம்: சர்வேயருக்கு 4 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதல் செய்ய லஞ்சம்: சர்வேயருக்கு 4 ஆண்டு சிறை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாறுதல் வழங்க, 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சர்வேயருக்கு, நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாமக்கல் அடுத்த, துத்திக்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.டி.ஓ., ராமசாமி, 81. அவர், தன் நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாறுதல் வழங்கக் கோரி, சர்வேயர் சம்பத்குமார், 61, என்பவரிடம் மனு அளித்தார். அதற்கு, '500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும்' என, சர்வேயர் கேட்டுள்ளார். இதுகுறித்து, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையில், ராமசாமி புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி, 2009, பிப்., 10ல், துத்திக்குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், ரசாயனம் தடவிய பணத்தை, சம்பத்குமாரிடம், ராமசாமி வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சர்வேயரை கைது செய்தனர். நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், வழக்கு நடந்தது. நீதிபதி கருணாநிதி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், சம்பத்குமாருக்கு, நான்காண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை