வட மாநிலங்களில் உயர்வால் நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநிலங்களில் உயர்வால் நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை அதிகரிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: வடமாநிலங்களில் விலை உயர்வால், நாமக்கல் மண்டலத்தில், முட்டைக்கோழி கொள்முதல் விலை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக, விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, 2017, டிச., 1ல், 83; 22ல், 63 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. பிப்., 1ல், 55; 5ல், 52; 12ல், 53; நேற்று, 58 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: முட்டைக்கோழிகள், கர்நாடகாவுக்கு, 60; கேரளாவுக்கு, 40 சதவீதம் விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் நேரத்தில், முட்டைக்கோழி விற்பனையின்றி தேக்கமடைந்தது. கொள்முதல் விலையை குறைக்கும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டனர். தற்போது, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கொள்முதல் விலை, ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்திலும் உயர்த்தப்பட்டுள்ளது. வியாபாரிகள், 13 ரூபாய் மைனஸ் செய்து, 45 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். முட்டைக்கு மைனஸ் கொடுப்பது போல் எங்களுக்கும் வேண்டும் என, கேட்டு பெறுகின்றனர். அதனால், ஒரு வாரத்தில், கொள்முதல் விலை, 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை