விலை வீழ்ச்சியால் அறுவடை நிறுத்தம்: செடியிலேயே கருகும் வண்ண சாமந்தி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலை வீழ்ச்சியால் அறுவடை நிறுத்தம்: செடியிலேயே கருகும் வண்ண சாமந்தி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேச்சேரி: விலை வீழ்ச்சியால், விவசாயிகள் அறுவடையை நிறுத்தியதால், வண்ண சாமந்தி பூக்கள், செடியிலேயே கருகுகின்றன.
சேலம் மாவட்டம், மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சியில், 200 ஏக்கரில், வண்ண சாமந்தி, ராஜமலர், சாந்தினி, பூர்ணிமா உள்ளிட்ட சாமந்தி பூ ரகங்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். உற்பத்தி செய்யும் பூக்களை, அவர்கள் தொப்பூர் பூ சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். சாமந்தி பூக்கள், ஒரு கிலோ குறைந்தபட்சம், 80 ரூபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே விவசாயிகள், லாபம் ஈட்ட முடியும்.

இதுகுறித்து, வெள்ளப்பம்பட்டி விவசாயிகள் கூறியதாவது: சிறுவகை வண்ண சாமந்தியை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு தொழிலாளி, தினமும் அதிகபட்சம், 15 கிலோ பூ அறுவடை செய்வார். அவருக்கு, 200 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். அறுவடை செய்ய, ஒரு கிலோவுக்கு, 13 ரூபாய் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. அதை சந்தைக்கு கொண்டு செல்ல, வாகன கட்டணம் சேர்த்தால் கிலோவுக்கு, 20 ரூபாய் செலவு. ஒரு வாரத்துக்கு முன், வண்ண சாமந்தி கொள்முதல் விலை, ஒரு கிலோ, 20 ரூபாயாக சரிந்தது. அதை அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு சென்றால், மேலும் செலவாகும். இதனால், பல விவசாயிகள், வண்ண சாமந்தி பூக்களை பறிக்காமல், செடியிலேயே விட்டுள்ளனர். இதனால், பூக்கள் கருகி வீணாகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை