கோவில் மராமத்து பணி தனியாருக்கு தாரைவார்ப்பு: பூம்புகார் விற்பனை நிலையங்கள் புறக்கணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் மராமத்து பணி தனியாருக்கு தாரைவார்ப்பு: பூம்புகார் விற்பனை நிலையங்கள் புறக்கணிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: பெரும்பாலான கோவில்களில், சிலை வடிவமைத்தல், தேர் உள்ளிட்ட மராமத்துப்பணி, தனியார் அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பூம்புகார் விற்பனை நிலைய அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், சென்னை, மாமல்லபுரம், தஞ்சாவூர், சுவாமிமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், டில்லி, ஆகிய இடங்களில், பூம்புகார் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், கலைத்தட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், பூம்புகார் கைவினைஞர்கள் மூலம், தங்கம், வெள்ளி, மரத்தேர்களை உருவாக்குவது, கோவில்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளை மேற்கொள்வது, மராமத்து பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. அரசு துறையைச் சேர்ந்த பூம்புகார் விற்பனை நிலையத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே சரியாக பயன்படுத்துவதில்லை.

இதுகுறித்து, பூம்புகார் விற்பனை நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், சிற்பங்கள், உற்சவர், தேர் ஆகியவற்றை செய்ய, புனரமைப்பு பணிக்கு, பூம்புகார் விற்பனை நிலையத்தை நாடிவருவர். இதனால், கணிசமான வருவாய் ஈட்டப்பட்டது. இரு ஆண்டுகளாக, கோவில் தொடர்பான ஆர்டர்கள் பெரியளவில் கிடைப்பதில்லை. அறநிலையத்துறையினர், நன்கொடையாளர்கள் மூலம், 'கமிஷன்' தொகைக்கு ஆசைப்பட்டு, சில தனியார் நிறுவனங்களிடம், கோவில் வேலைப்பாடுகளை வழங்குகின்றனர். சிலை உள்ளிட்ட பொருட்களையும், கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு, ஒட்டுமொத்தமாக பூம்புகாரின் விற்பனை, 40 கோடி ரூபாய். இந்த நிலையங்களில், வருமானம் அதிகரிக்க, அறநிலைய அதிகாரிகள், எங்களிடம் கோவிலுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதோடு, மராமத்து பணி அனுமதியையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை