மன அழுத்தம் குறைக்க கலந்துரையாடல்: அனைத்து பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன அழுத்தம் குறைக்க கலந்துரையாடல்: அனைத்து பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தேர்வு குறித்து, பிரதமருடன் நாளை நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, அனைத்து பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நேர, மன அழுத்தம் குறைப்பது குறித்து, நாளை காலை, 11:00 முதல், 12:00 மணி வரை, தூர்தர்ஷன் மற்றும் வானொலியில், பிரதமர் நரேந்திர மோடியுடன், மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தூர்தர்ஷன் மற்றும் வானொலி மட்டுமின்றி, கணினி, மடிக்கணினி உள்ளிட்டவற்றில், பிரதமருடன், மாணவர்கள் கலந்துரையாடலை காண முடியும். இதற்கு தயாராக இருக்க, பழுது நீக்கம் செய்யும் பணி, ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்துதல், வசதியில்லாத பள்ளிகளில், 'டிவி'யை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்ட நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X