மலைக்கு பக்தர்கள் வருகை குறைவு: திருப்பி அனுப்பப்பட்ட சிறப்பு பஸ்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கு பக்தர்கள் வருகை குறைவு: திருப்பி அனுப்பப்பட்ட சிறப்பு பஸ்கள்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மாதேஸ்வரன் மலைக்கு, பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால், சில சிறப்பு பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
மாசி அமாவாசையை முன்னிட்டு, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மேட்டூர் அடுத்த, மாதேஸ்வரன் மலைக்கு செல்வர். அதன்படி, இன்று, ஏராளமான பக்தர்கள், மாதேஸ்வரன் மலைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சேலத்திலிருந்து, 40, தர்மபுரியிலிருந்து, 15 என, 55 சிறப்பு பஸ்கள், நேற்று, மேட்டூரிலிருந்து, மாதேஸ்வரன் மலைக்கு இயக்கப்பட்டன. ஆனால், வழக்கத்தை விட, பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பஸ்கள், குறைவான பக்தர்களுடன் இயக்கப்பட்டன. இதனால், சிறப்பு பஸ்களின் ஒரு பகுதியை, வேறு வழித்தடத்தில் இயக்க, சேலம், தர்மபுரிக்கு, திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கை குறைவுக்கு, பஸ் கட்டண உயர்வும் ஒரு காரணம் என, போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை