இறுதி கட்டத்தை எட்டிய வழக்கு: குஷ்பு பிப்., 19ல் ஆஜராக உத்தரவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறுதி கட்டத்தை எட்டிய வழக்கு: குஷ்பு பிப்., 19ல் ஆஜராக உத்தரவு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: முட்டை வீசிய வழக்கு, இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், நடிகை குஷ்பு, வரும், 19ல், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நடிகை குஷ்பு மீது, அழுகிய முட்டைகளை வீசிய வழக்கு, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1ல், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கில் புலன்விசாரணை அதிகாரி, டி.எஸ்.பி., தினகரன், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தார். அவரிடம், ஒன்றரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது. இதர சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், முக்கிய சாட்சியான குஷ்பு, வரும், 19ல், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க, மாஜிஸ்திரேட் ராஜா உத்தரவிட்டார். இதன் மூலம், 13 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை