மஹா சிவராத்திரி மஞ்சு விரட்டு: காளை முட்டி ஒருவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மஹா சிவராத்திரி மஞ்சு விரட்டு: காளை முட்டி ஒருவர் பலி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கம்: செங்கம் அருகே, மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த, மஞ்சு விரட்டில், காளை முட்டியதில் ஒருவர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மஞ்சு விரட்டு நடந்தது. திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். மஞ்சு விரட்டில் பங்கேற்ற, கெங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 42, என்பவரை காளை முட்டி, கீழே தள்ளி மிதித்தது. மேலும், நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 45, என்பவரையும் காளை முட்டியதில் காயமடைந்தார். இருவரையும், சிறுவள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, சுரேஷ் உயிரிழந்தார். கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை