லாக்கர் சாவி தொலைந்ததாக கூறி அலைக்கழிப்பு: கூட்டுறவு சங்கத்தில் அடகு நகை தராமல் இழுத்தடிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாக்கர் சாவி தொலைந்ததாக கூறி அலைக்கழிப்பு: கூட்டுறவு சங்கத்தில் அடகு நகை தராமல் இழுத்தடிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் அடகு வைத்த நகைகளுக்கு பணம் செலுத்தியும், லாக்கர் சாவி தொலைந்ததாக கூறி, நகைகள் வழங்காமல், விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில், உழவர் பணி கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில், 6,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அப்பகுதியை சுற்றி உள்ள மக்கள், விவசாயத்திற்கு தேவைப்படும் உரம், யூரியா, பூச்சி மருந்து, குறைந்த வட்டியில் நகை கடன்களை பெற்று வருகின்றனர். சங்க தலைவராக விஜயாதேவேந்திரன், இயக்குனராக பழனி, நகை மதிப்பீட்டாளராக ஜெயலட்சுமி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில், தினமும், சராசரியாக, 10 பேர், நகை கடன் பெற்று செல்கின்றனர். அவ்வாறு கடன் வாங்கியவர்கள், அசல் வட்டியுடன் சேர்த்து கடனை செலுத்தி, நகைகளை மீட்டு செல்வர். கடந்த, 7 முதல், 20க்கும் மேற்பட்டோர், நகை கடனுக்கான அசலும், வட்டியும் சேர்த்து கட்டியும், நகைகளை திருப்பி வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். நகைகளை திரும்ப கேட்கும் விவசாயிகளிடம், 'லாக்கர் சாவி தொலைந்து விட்டது. அது கிடைத்ததும் லாக்கரில் உள்ள நகைகளை திருப்பி தருகிறோம்' என, கூறி அலைக்கழிக்கின்றனர். 'சங்க தலைவரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவதால், எங்கள் நகைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. நகைகளை கையாடலும் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை