மிடுக்கான மின் மிதிவண்டி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மிடுக்கான மின் மிதிவண்டி!

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மிடுக்கான மின் மிதிவண்டி!

மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட மிதிவண்டிகளை பல விதங்களில் வடிவமைத்து அசத்தி வருகிறது, 'ஈ.வி., 4' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஜாக் ஸ்கோபின்ஸ்கி. இவர், அண்மையில் வடிவமைத்திருக்கும் மூன்று சக்கர -மின் மிதிவண்டி, வளைவுகளில் சாய்ந்து கொடுத்துச் செல்வதோடு, மேடு, பள்ளங்களில் இசைந்து கொடுத்து, ஓட்டுனரை அலுங்காமல் சுமந்து செல்லக் கூடியது.
'ஈ.வி., 4' -மின் மிதிவண்டிக்கு முன்பக்கம், இரு சக்கரங்களுக்கு அருகிலேயே மிதிக்கும் சக்கரத்தை வைத்திருப்பதால், வண்டியை ஓட்டுபவர், சாய்மான இருக்கையில் சாய்ந்து அமந்து ஓட்ட முடியும்.
'ஈ.வி., 4' வண்டிக்கு புகழ்பெற்ற ஷிமானோவின் ஏழு கியர்கள் வசதியை பொருத்தி இருக்கின்றனர். வண்டியிலுள்ள மின்கலன் ஒரு மின்னேற்றத்திற்கு, 80 கி.மீ., வரை செலுத்தும். மின்சாரம் தீர்ந்தால் கவலையில்லாமல் மிதித்தே போக வேண்டிய இடத்தை அடையலாம்.
வண்டியை நிறுத்த மூன்று சக்கரங்களுக்கும், 'ஹைட்ராலிக் பிரேக்' உண்டு. அலுவலகங்களுக்கு தினமும் மிதிவண்டியில் போக விரும்புவோரையும், சுற்றுச்சூழல் பிரியர்களையும் இலக்கு வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும், 'ஈ.வி., 4'ன் புதிய -மின் மிதிவண்டியின் விலை, 2.55 லட்சம் ரூபாய் என்பது தான் இடறுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை