விண்ணில் மிதக்கும் மின்சார கார்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விண்ணில் மிதக்கும் மின்சார கார்!

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விண்ணில் மிதக்கும் மின்சார கார்!

உலகின் மிகச் சக்தி வாய்ந்த, 'பால்கன் ஹெவி' ராக்கெட்டை கடந்த, 6ம் தேதி அன்று ஏவி, வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது, 'ஸ்பேஸ் எக்ஸ்!'
அமெரிக்க தனியார் விண்வெளி அமைப்பான இதன் அதிபர் எலான் மஸ்க், ஒரு குறும்புச் சோதனையாக, அந்த ராக்கெட்டில், தன் டெஸ்லா நிறுவனம் தயாரித்த, 'ரோட்ஸ்டர்' என்ற செர்ரி பழ சிவப்பு நிற மின்சார காரை, ராக்கெட்டில் வைத்து அனுப்பினார்.
ஒரு புதிய ராக்கெட்டை வெள்ளோட்டம் பார்க்கும்போது, அதில் சிமென்ட் பலகைகள் அல்லது கனமான உலோகங்களை மட்டுமே வைத்து அனுப்புவர்.
ஆனால், மஸ்க் தன் ரோட்ஸ்டர் காரையும், அதில், 'ஸ்டார் மேன்' என்ற பொம்மை விண்வெளி வீரரையும் வைத்து அனுப்பி இருக்கிறார்.
அது இனி பூமி, செவ்வாய் கோள்களைப் போலவே, சூரியனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வலம் வந்து கொண்டிருக்கும்! அது மட்டுமல்ல, ரோட்ஸ்டரைப் போலவை ஒரு கையடக்க மாதிரி பொம்மையை செய்து, அதிலும் ஒரு மினி ஸ்டார் மேன் பொம்மையை வைத்து, அனுப்பியிருக்கிறார் மஸ்க்.
காரின் பொருட்களை வைக்கும் இடத்தில், எழுத்தாளர் ஐசக் அசிமோவ் எழுதிய, 'தி பவுண்டேஷன் டிரைலாஜி' என்ற தலைப்பிலான அறிவியல் புனைகதைகளைப் பதிந்த குறுவட்டையும் வைத்து அனுப்பியுள்ளார் மஸ்க்.
இந்த காரில், ஒரு ஒளிப்படக் கருவி, பூமிக்கு தான் காணும் காட்சிகளை நேரலை செய்தபடியே இருக்கும். அதாவது, அதன் மின்கலன் தீரும் வரை.
எல்லாம் சரி, அமெரிக்க அரசு அமைப்பான நாசா, விண்வெளியில் மிதக்கும் இந்த கார் மீது கண் வைத்திருக்கப் போகிறது. ஏன்? விண்வெளியில் மிதக்கும், 7.55 லட்சம் விண் கற்கள், 3,500 வால் நட்சத்திரங்கள் உட்பட, பல விண் பொருட்களை பெயரிட்டு, வகைப்படுத்தி கண்காணித்து வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய ரோட்ஸ்டரின் தற்போதைய இருப்பிடத்தை கண்காணிக்காவிட்டால், பூமியில் பொழுதுபோக்கு வானியல் ஆர்வலர்கள் யாராவது அதை, புதிய விண் கல் என, தவறாகச் சொல்லக்கூடும். அதைத் தடுக்கத் தான் இந்த கண்காணிப்பு.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை