கடல் நீரை குடிநீராக்கும் வடிகட்டி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடல் நீரை குடிநீராக்கும் வடிகட்டி!

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கடல் நீரை குடிநீராக்கும் வடிகட்டி!

கடல் நீரை குடிநீராக்க, பல தொழில்நுட்பங்கள் ஆய்வில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை மின்சாரம், வெப்பம் போன்ற ஏதாவது சக்தி மூலம் இயங்குபவையாக இருப்பதால் செலவு பிடித்தவை.
அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எந்தவித எரிசக்தியும் தேவைப்படாத, எளிய வடிகட்டியை உருவாக்கி உள்ளனர்.
உலோக -கரிமப் படிமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிகட்டியில், ஒரு பக்கம் கடல் நீரை ஊற்றினால், மறு பக்கம் குடிநீர் வெளிவரும்.
அது மட்டுமல்ல, மின் வாகனம், சூரிய மின் தேக்கிகளில் அதிகம் பயன்படும் லித்தியத்தையும் கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்க, இந்த புதுமை வடிகட்டி உதவும் என்கின்றனர் ஆஸ்திரேலிய- - அமெரிக்க விஞ்ஞானிகள்.
உலோக -கரிமப் பொருட்கள், பல பக்கங்களைக் கொண்ட நேனோ படிகங்கள். இவற்றில், 1 கிராம் எடையளவுள்ள படிகங்களின் பக்கங்களைச் சேர்த்து விரித்துப் பார்க்க முடிந்தால், ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவுக்கு இருக்கும்.
இந்தப் பரப்பளவின் வழியே கடல் நீர் செல்லும் போது, அதிலுள்ள சில உலோகங்கள், வேதிப் பொருட்களை மட்டும் பிரித்தெடுத்து நிறுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள், இந்த வகையில், லித்தியம் அயனிகளை இந்த புதிய வடிகட்டி நிறுத்தும் திறன் கொண்டது.
கடல் நீரில் லித்தியம் உண்டு என்பதால், குடிநீரை தந்த பின், வடிகட்டியிலிருந்து லித்தியத்தை எடுத்து, மின்தேக்கிகளை உருவாக்கப் பயன்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X