பொது இடத்தில் சர்ர்... அமைச்சர் பெயர் டர்ர்ர்...| Dinamalar

பொது இடத்தில் சர்ர்... அமைச்சர் பெயர் டர்ர்ர்...

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சுகாதார அமைச்சர் காளிச்சரண்,  தூய்மை இந்தியா, அர்ச்சனா சர்மா, ராஜஸ்தான் அமைச்சர், காளிசரண் சாரப், Minister of Health Kalicharan, Purity India, Archana Sharma, Rajasthan Minister, Kalicharan Sarab, Swachh Bharat, BJP Minister ,

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சரை ஏராளமானோர் கிண்டல் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சராக இருக்கும் காளிசரண் சாரப், சாலையோரத்தில் கட்டடம் ஒன்றின் சுவரில் சிறுநீர் கழித்தார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என்ற போதிலும், இது பெரிய விஷயமல்ல எனக்கூறியதாக கூறப்படுகிறது.


வெட்கப்பட வேண்டும்


இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணை தலைவர் அர்ச்சனா சர்மா கூறியதாவது: தூய்மை இந்தியா திட்டத்திற்கு அரசு அதிக பணம் செலவு செய்யும் நிலையில், அமைச்சர் செய்தது வெட்கப்பட வேண்டிய செயல் எனக்கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரகு சர்மா கூறுகையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து அரசு பேசி கொண்டிருக்கும் நிலையில், சுகாதார அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.


கிண்டல்


பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக, அமைச்சரை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில பிரபலங்களும், இந்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பலர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201822:46:30 IST Report Abuse
Mani . V "மாலினி 22 பாளையங்கோட்டை" என்னும் திரைப்படத்தில் "செய்வது" மாதிரி இந்த அமைச்சர்களுக்கும் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sundararaghavan.R - Chennai,இந்தியா
15-பிப்-201822:23:55 IST Report Abuse
sundararaghavan.R வாட்டவேர் டன் இஸ் டன்.தேர் மே பெ மேனி ரீசன்ஸ் including ஹி பெ எ டியாபெடிக்.பட் லேட் தி கோவேர்ந்மேன்ட் .provide adequate infrastructural பாசிலிட்டிஸ் நோட் டு recur .
Rate this:
Share this comment
Cancel
velavan - Grenoble,பிரான்ஸ்
15-பிப்-201821:30:35 IST Report Abuse
velavan உங்க தமிழை நீங்க தான் பாராட்டிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201821:27:27 IST Report Abuse
தமிழ்வேல் இவருதானே 2 ,3 மாஸ்டத்துக்கு முன்னால இன்னொரு முறை ஒரு சுவருக்குப் பக்கத்திலே இருந்தாரு ?
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
15-பிப்-201821:05:36 IST Report Abuse
K.   Shanmugasundararaj ஊருக்கு தான் உபதேசம் . உனக்கும் எனக்கும் இல்லை".
Rate this:
Share this comment
Cancel
NMuthuuselvann Muthuuselvann - tirunelveli,இந்தியா
15-பிப்-201820:45:45 IST Report Abuse
NMuthuuselvann Muthuuselvann இதை பெருசு படுத்தாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201819:43:05 IST Report Abuse
Kuppuswamykesavan இந்தியா தான், "நீரழிவு நோயின்" தலைமையகம் என்று பெயர்வாங்கிவிட்டது.. ஆண்கள் மூன்று மணிக்கு ஒருதடவையும், பெண்கள் ஐந்து மணிக்கு ஒருதடவையும் சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல்வேறு நோய்கள் இந்த சிறுநீர் அடக்கிவைப்பதால் வருவதாகவும் குறிப்புகள் சொல்கின்றன,. இதை எந்த அரசும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை..சிறுநீர் கழிக்க எந்தவொரு வசதியும் எந்த சாலைகளிலும், தெருக்களிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தில் கூட செய்யவில்லையே.. முதலில் இதற்கு இலவச வசதிகளை செய்துவிட்டு, மக்களோ, அரசியல்வியாதிகளோ சிறுநீர் கழித்தவரை விமர்சிக்கட்டும்.. பாவம், அவர் சர்க்கரையளவு எவ்வளவு இருக்கிறதோ??.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:49:20 IST Report Abuse
K.Sugavanamபலகோடி பொதுக்கழிப்பிடங்கள் கட்டியதா சொல்லிக்கிறாங்களே..சுவச்சிலை..இங்க கட்டலை போல..சீக்கிரம் ஒரு கழிப்பிடம் கட்ட சொல்ல வேண்டியதுதான்..பாவம் சுகாதார அமைச்சர்..அடக்கமுடியாம என்ன பாடு பட்டு இருப்பாரு.....
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
15-பிப்-201819:18:18 IST Report Abuse
P. Kannan ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்பது தெரியாதா, ஒரு வேலை அவர் ஒரு சிறுநீரக நோயாளியாய் இருந்தால் காரே நாறிப்போய் இருக்கும். அந்த இடத்தில அமைச்சர் நினைவாக ஒரு சிறுநீர் கழிப்பிடம் கட்டச்சொல்லுங்கள் . இனி யாரும் அந்த இடத்தில் இதுபோல் அசிங்கப்பட வேண்டாமே???
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201818:35:56 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நல்ல அமைச்சரு..நல்ல கச்சி..நல்ல தலைம... நல்ல கொள்க..நைனா நைனா ....
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
15-பிப்-201818:24:20 IST Report Abuse
chails ahamad ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்ற நிலையிலே , பா ஜ அமைச்சர் சாலையின் ஓரத்தில் மூத்திரம் பெய்ததை தவறாக கருத இயலவில்லை , இருப்பினும் இவரே சுகாதார அமைச்சர் என்பதினாலே இத்தனை வசை பாடுதல் நிகழ்வதும் இயல்பே . அமைச்சரை பழி வாங்கிடவே உடன் சென்றவர்கள் இந்த போட்டோவை எடுத்து உலாவ விட்டுள்ளார்கள் என்பதை நம்மால் உணர முடிகின்றது . இதுதான் பா ஜ கலாச்சாரமோ ?.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:51:04 IST Report Abuse
K.Sugavanamஅவர் இயற்கை உபாதையை எதிர்கொள்ள கூட ஒரு பாது காவலர் பாதுகாப்பா நிக்காரு..பாவம் அவரு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை