ராணுவ பட்ஜெட்: 5வது இடத்தில் இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ பட்ஜெட்: 5வது இடத்தில் இந்தியா

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Indian Military Budget, British Army, USA Army, ராணுவ பட்ஜெட், சீனா ராணுவம், பிரிட்டன் ராணுவம், அமெரிக்கா ராணுவம், ரஷ்யா ராணுவ பட்ஜெட், சவுதி அரேபியா ராணுவ பட்ஜெட், இந்திய ராணுவ பட்ஜெட், சர்வதேச தளவாட படிப்பு, Military Budget, China Army,  Russia Military Budget, Saudi Arabia Military Budget,

புதுடில்லி: உலகளவில், ராணுவ பட்ஜெட்டிற்கு அதிக ஒதுக்கீடு செய்யும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு 5ம் இடம்

சர்வதேச தளவாட படிப்புகளுக்கான இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, உலகளவில் ராணுவ பட்ஜெட் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2017 ம் ஆண்டில் உலகளவில் ஒவ்வொரு நாடும் ராணுவ பட்ஜெட்டிற்கு ஒதுக்கிய தொகை அடிப்படையில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டின் ராணுவ பட்ஜெட் 37.77 லட்சம் கோடி ரூபாய். இந்த விஷயத்தில் முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம் பிடித்துள்ளது. இதுநாள் வரை ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, இந்தியா பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 3.30 லட்சம் கோடி ரூபாய். பிரிட்டன் ராணுவத்திற்காக, 3.19 லட்சம் கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்த நாட்டின் ராணுவ பட்ஜெட் 9.48 லட்சம் கோடி ரூபாய். இது, இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம். இந்த பட்டியலில் 4.83 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி சவுதி அரேபியா மூன்றாவது இடத்திலும், 3.85 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-பிப்-201801:08:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்னமோ அலெக்ஸ்சாண்டர் கைப்பற்றினார்ன்னு சொல்றா மாதிரி உண்மைக்கு புறம்பாக கதை உடுறீங்க. இல்லாத பாதுகாப்பை இருப்பதாக இட்டுக்கட்டி விடுவது நமக்கு தான் ஆபத்து தான். நடக்கும் நடப்பை பற்றி உண்மையை கூறுங்கள்.. ஜூலை 2017 இல், சீன ராணுவ, கடற்படையின் (People’s Liberation Army Navy-PLAN) தளத்தை டிஜிபோட்டியில் திறந்து வைத்தது சீனா. The early morning hours of July 11, 2017, marked a watershed moment for the People’s Republic of China. In an official ceremony at the port of Zhanjiang, the commander of the People’s Liberation Army Navy (PLAN), Shen Jinlong, “read an order for the construction of China’s first replenishment base in Djibouti, and conferred military flag on the fleets.”.. இந்திய முப்படைகளையே அம்பானிகளுக்காக சுரண்டும் தேசப்பதர்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
16-பிப்-201809:05:24 IST Report Abuse
amirசீனா இந்தியாவை குறி வைத்து சுற்றி தன் படையை நிறுத்துகிறது . சினிமா படத்தில் வில்லன் ஹீரோவுக்கு ஒவ்வொரு தொல்லை கொடுப்பது போல் சீனா என்ற வில்லன் செய்கிறது . இது ஒரு சப்பை கட்டு பாகிஸ்தான் . இரண்டு வில்லன்களை சமாளிக்க சரியான ஹீரோ மோடி . சீனா முதலில் இலங்கை துறைமுகம் எடுக்க ராஜபக்சவுடன் உறவு வைத்தது . லட்சக்கணக்கான தமிழர்களை கொல்லுவதற்கு காரணம் சீனா . சீனாவின் செயலை கண்டு மண்மோகன் எதிர்த்து ஒரு துரும்பு கூட போட முடியாத மண் ஆகினர் . மோடி வந்தார் அஜித் தோவலை அனுப்பி ராஜபக்சவை தோற்கஅடித்தார் . அடுத்து நேபாளத்தை சீனா குறிவைத்தது வழக்கம்போல் மண் வேடிக்கை பார்த்தது . மோடி வந்தவுடன் அது சரி செய்யபட்டது . மோடி வசம் பூடான் , வங்கதேசம் , வியட்நாம் , ஆப்கானிஸ்தான் , ஈரான் , செய்செல்லெஸ்,வியட்நாம் இப்போது ஓமன் . நம் நாட்டின் பாதுகாப்புஇக்காக மோடியின் கஷ்ட பட்டதை பாராட்டாமல் ஒரு சில காழ்புணர்ச்சிக்காரர்கள் இந்தியாவிடம் எல்லா வசதியை பெற்று கொண்டு இந்தியாவையும் . இந்தியாவுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களையும் திட்டுவது , மிமிஸ் போடுவது தான் வேலை ....
Rate this:
Share this comment
Cancel
sam - Bangalore,இந்தியா
15-பிப்-201822:48:17 IST Report Abuse
sam This is not a great achievement, India government need to produce in India itself that will bring down the cost.
Rate this:
Share this comment
Cancel
raja -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201822:19:26 IST Report Abuse
raja kuppuswamy kesavan has full time job for jill jang jak for pakoda jalsa party,how the bones on the spot or daily or monthly,or any,mla seat or (ko pa se)
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:46:17 IST Report Abuse
K.Sugavanam அருமை...ராணுவ பட்ஜெட் செலவு நாட்டின் பெருமையா? தில் பாதியளவு மக்கள் நல்வாழ்வுக்கு செலவழித்தால் இந்தியா எங்கயோ போயிருக்குமே..
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
16-பிப்-201808:45:43 IST Report Abuse
amirநம் முன்னோர்களிடம் அளவுக்கு மீறி தங்கம் , தான்யம் வசதியாக இருந்தோம் . என்ன பாதுகாப்பு விசயத்தில் கோட்டை விட்டோம் . அதனால் தான் மொகலாயர்கள் கொள்ளை அடித்தனர் , பல அப்பாவிகள் கொன்றனர் , பெண்கள் அடிமைகளாக பிடிக்க பட்டு அவர்கள் நாட்டு இழுத்து சென்றனர் . அப்பறம் நம்மை ஆண்டனர் . நமகே வரி போட்டனர் .அடுத்து ஆங்கிலேயர் வந்தனர் மிச்ச உள்ளதை சுருட்டினர் , நம்மை அடிமைகளாக ஆண்டனர் . இதே ராஜராஜன் காலத்தில் ஒவ்வரு நாட்டின் மீது படை எடுத்து நம் நாட்டிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினர் . ராஜராஜன் , ராஜேந்திரன் மேற்கே படை எடுத்திருந்தால் முஹலயரிடம் நாம் வீழ்வதுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201821:41:07 IST Report Abuse
Ravichandran மோடி குமார் ஜி நீங்கள் நிறைய விளக்கி எழுதி உள்ளீர்கள். எங்களுக்கு இதுபோன்று எழுத நேரம் இல்லை வேலை அப்படிப்பட்டது ஆகவே நீங்கள் இது போன்றவைகள் மக்களுக்கு புரியும் படி தொடர்ந்து எழுதவேண்டும் மோடி என்ற ஒரு உண்மை தலைவனை பற்றி மரமண்டைக்கு புரியும்படி அணைத்து விஷயமும் எழுதுங்கள், எனது வேண்டுகோள். மோடி ஜி செய்யும் தொண்டு தேசத்தை முதன்மை பாதைக்கு அழைத்துச்செல்லும் அதனால் தடம்புரண்ட கூட்டமும் வாழ்ந்துவிட்டு போகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201819:46:18 IST Report Abuse
Niranjan ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைத்து கொண்டு கொஞ்சம் மக்கள் நல்வாழ்வுக்கு காக செலவு செய்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201819:45:50 IST Report Abuse
ஆரூர் ரங் நாட்டின் பிரிவினையை நடக்கவிட்டிருக்கக்கூடாது அல்லது அதனை முழுதாக செய்திருக்க வேண்டும் .அரைகுறையாக செய்ததன் பலனை அனுபவிக்கிறோம் ராணுவ செலவைக் குறைத்தாலே ஜி டி பி வளர்ச்சி 12 கூட இருக்கும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:40:59 IST Report Abuse
K.Sugavanamஅட என்னென்னவோ சொல்லறாரு..வழக்கம் போல மொட்டை தையாக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் நம்ப நேசர்.....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201819:34:01 IST Report Abuse
Kuppuswamykesavan ஒரு வேளை சீனா இந்தியா போர் வந்தால் சீனக் கடற்படை பாகிஸ்தானின் கடற்படை யோடு இணைந்து குவாடர் துறைமுகத்தில் இருந்து நம்முடைய துறைமுகங்களை தாக்க வருவார்கள். இந்த அபாயத்தில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நினைத்த மோடி குவாடர் துறைமுத்திற்கு மிக அருகில் சுமார் 76 கடல்மைல் தொலைவில் இருக்கும் ஈரானின் சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றி அங்கு தயார் நிலையில் இந்திய கடற்படை யை வைத்துக் கொண்டார். இதை எதிர் பாராத சீனா ஆரம்பத்தில் தடுமாறினா லும் அடுத்து ஆப்பிரிக்க நாடான டிஜி போட்டியில் தன்னுடைய கடற்படை தளத்தை அமைத்தது. இந்த டிஜிபோட்டி நாடு சீனாவின் லட்சக்கணக்கான கோடிகளை கடன் வாங்கி காலம் தள்ளும் நாடு. இந்தியா சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றிய பிறகே பதிலடியாக சீனா டிஜிபோட்டியில் கடற்படை தளத்தை அமைத்தது. சீனாவின் இந்த முயற்சியை முறியடிக்க மோடி எடுத்த நடவடிக்கைதான் ஓமனின் டம் துறைமுகத்தை கைப்பற்றியது.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:42:29 IST Report Abuse
K.Sugavanamகைப்பற்றினாரா?இல்லை கூட்டு ஒப்பந்தம் போட்டாரா?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-பிப்-201801:12:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்Oman has only given berthing rights to Indian Navy vessels, which have been used for anti-piracy operations in the Gulf of Aden. - Only to Anti-Piracy operations என்பது முக்கியமானது....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201819:30:45 IST Report Abuse
Kuppuswamykesavan ஓமன் அங்கு வாழும் சுமார் 32 லட்சம் இந்தியர் களுக்கு வேலை கொடுத்து சோறு போடும் நாடு. இப்படி வல்லமை யான நாடு எப்படி இந்தியா வின் வலைக்குள் விழுந்தது என்பது தான் என்னுடைய ஆச்சரியம்.மோடியின் மிக சிறந்த ராஜ தந்திர நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201819:25:24 IST Report Abuse
Kuppuswamykesavan ஓமனின் முக்கிய துறைமுக மான டம் துறைமுகத்தை இந்தியா ராணுவ தளமாக பயன்படுத்திக் கொள்ள லாம் என்று ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மோடிக்கு எழுதிக் கொடுத்தது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை