கோவில்களும், இந்து அறநிலைய துறையும்!| Dinamalar

கோவில்களும், இந்து அறநிலைய துறையும்!

Added : பிப் 17, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கோவில்களும், இந்து அறநிலைய துறையும்!

சில மாதங்களாக தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்கள் சிலவற்றில், தொடர்ச்சியாக சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. திருச்செந்துாரில் மண்டபம் இடிந்து விழுந்தது; மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வீரவசந்தராயர் மண்டபம் தீக்கிரையானது; திருவாலங்காட்டில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடித்து சாம்பலானது.
இவற்றால், ஆட்சியாளர்

களுக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது பதவி பறிபோகுமா அல்லது ஆட்சி கலைக்கப்படுமா என்பது போன்ற, ஒன்றுக்கும் உபயோகமில்லாத சிந்தனைகள் தான், மக்களிடையேயும், ஆட்சியாளர்களிடமும் உலாவி கொண்டிருக்கின்றன.ஆனால், திருக்கோவில்களில் அசம்பாவிதங்கள் நிகழ உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. மேலும், அதைத் தடுப்பது
எப்படி என, கவலையும் படுவதில்லை; அது குறித்து பேசுவதுமில்லை.திருக்கோவில்களைச் சுற்றி கடைகள் வியாபித்திருப்பது தான், தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், கடைகள் மட்டுமே காரணமல்ல; கடைகளும் ஒரு காரணம்!திருக்கோவில்களில் அசம்பாவிதங்கள் நிகழ, முழு முதற் காரணம், இந்து அறநிலையத் துறை தான். இதை யாரும் மறைக்கவோ, மறக்கவோ கூடாது. அறநிலையத் துறை என்பது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில்
இயங்கும் ஓர் அரசுத் துறை.நம் நாட்டில், இந்து மதக் கோவில்கள் உள்ளன; கிறிஸ்துவ மத சர்ச்சுகள் இருக்கின்றன; இஸ்லாமியர்கள் வழிபட மசூதிகள் உள்ளன.
இதில், இந்து மத கோவில்களை தவிர, சர்ச்சுகளோ, மசூதிகளோ அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராமல், தனித்து சுதந்திரமாக, அந்தந்த மதகுருமார்களின் தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குகின்றன.நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே, இந்து கோவில்கள் மீது ஆங்கிலேயர்களின் பார்வை விழுந்தது. 1925ம் ஆண்டிலேயே, 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின், 1951ல், மத்திய அரசு, அத்துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது; ஆனால், பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு தலையிடாமல்
தவிர்க்க, 'மதச்சார்பின்மை' என்ற லேபிளை, அரசு தன் முகத்தில் மூடியாக போட்டுக் கொண்டது.

மதச்சார்பின்மை என்றால் என்னவென அறியாத, 'அறிவாளி'களிடம், மதச்சார்பின்மை சிக்கி, பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில், எந்த மதத்தின் சடங்கு, சம்பிரதாயங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் மூக்கை நுழைக்காமல், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதே, உண்மையான மதச் சார்பின்மை.ஆனால், அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது... இந்து மதத்தைத் தவிர, ஏனைய மத விஷயங்களில், மூக்கையோ, முதுகையோ நுழைக்காமல், ஓரமாக நின்று, வேடிக்கை மட்டும் பார்க்கிறது.இந்து மதத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், மூக்கையும், முதுகையும் மட்டுமல்ல; முழு உடம்பையும் நுழைத்து, சம்மணமிட்டு அமர்ந்து, கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்த கஜனி முகமது, குஜராத் மாநிலத்தின், சோம்நாத் கோவில் மீது, 17 முறை படையெடுத்து, விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துச் சென்றான். சுதந்திர இந்தியாவில், அந்த, 'திருப்பணி'யை, அரசுகளே செய்ய
ஆரம்பித்தன; செய்து கொண்டிருக்கின்றன.

கோவில் மீது முதலில் கை வைத்தது, ஆந்திர முதல்வராக இருந்த, என்.டி.ராமாராவ் தான். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பசியாற, அன்னதான திட்டத்திற்கு, கோவிலின் உண்டியல் வசூலை, அவர் பயன்படுத்த உத்தரவிட்டார்.ஆனால், நம் மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறையோ, கோவில்களின் அன்றாட அலுவல்களில் தலையிட்டு, அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.பெருமாளுக்கோ, ஈஸ்வரனுக்கோ, முருகனுக்கோ, விநாயகருக்கோ, அம்பாளுக்கோ ஏதாவது செய்ய வேண்டுமானால், அறநிலையத் துறை அனுமதித்த பின் தான் செய்ய முடியும்.அர்ச்சனை டிக்கெட் கட்டணங்களிலிருந்து, உண்டியல் காணிக்கை வசூல் வரை, கோவில் வருவாயில், 16 சதவீதத்தை அரசுக்கு அளிக்க வேண்டுமென சட்டமியற்றி, அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.உதாரணமாக, அர்ச்சனை டிக்கெட் கட்டணம், 1௦ ரூபாய் என்றால், அதில், 1.60 ரூபாய் அரசுக்கு, அதாவது, இந்து அற
நிலையத் துறைக்கு போய் விடுகிறது.தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் என, ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிக்க ஆலோசனையும் வழங்கி, அதில், 16 சதவீதத்தை, 'ஆட்டை' போட்டுக் கொண்டிருக்கிறது, இந்து சமய அறநிலையத் துறை.சுவாமிக்கு படைக்கும் சர்க்கரை பொங்கலில், எவ்வளவு முந்திரி பருப்பு, திராட்சை போட வேண்டும்; வெண் பொங்கலில் எவ்வளவு மிளகு, சீரகம் போட வேண்டும்; சுவாமிக்கு எத்தனை பழம் நிவேதனம் செய்ய வேண்டும் என, கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்து அறநிலையத் துறையின் ஆட்டத்திற்கேற்ப ஆடிக் கொண்டு இருக்கின்றனர் அர்ச்சகர்கள்.
அறநிலையத் துறையில், 1967 வரை, அரசு அதிகாரிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், 1967லிருந்து, அதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த நாள் முதல், கோவில் நிர்வாகத்தில், 'அறங்காவலர்கள்' என்ற போர்வையைப் போர்த்திய, கழகக் கண்மணிகளும், உடன் பிறப்புக்களும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர்.பிரசித்தி பெற்ற கோவில்களில், மாவட்டச் செயலர்களும், ஏனைய சாதாரண கோவில்களில் வட்டச் செயலர்களும், அறங்காவலர் குழுத்
தலைவர்களாக ஆயினர்.கோவில்களில், அறங்காவலர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் அமர்ந்தவர்கள், 'கடவுள் இல்லை; கடவுளைக் கும்பிடுகிறவன் முட்டாள்' என, பரணி பாடிக் கொண்டிருந்தவர்கள். 'அன்பே சிவம் என்றால், அவன் கையில் சூலாயுதம் எதற்கு... வேர்க்கடலை நோண்டவா' என, கேள்வி கேட்டு, கேலி செய்தவர்கள்!அறங்காவலர்கள் போர்வையுடன் கோவிலில் நுழைந்த உடன்பிறப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை, கபளீகரம் செய்ய துவங்கினர்.
கோவில்களைச் சுற்றி, கடைகளை அமைத்து, அவற்றை கட்சிக்காரர்களுக்கு, சொற்ப கட்டணத்திற்கு குத்தகைக்கு கொடுத்தனர்.இப்போதிலிருந்து, 50 - 60 ஆண்டுகளுக்கு முன், எந்த கோவில் வாசலிலும் கடைகளை நான் பார்த்ததில்லை.

அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால், தேங்காய், பூ, பழம், கற்பூரம் போன்ற பூஜைப் பொருட்களை, வீட்டிலிருந்தே எடுத்து செல்வது தான் வழக்கமாக இருந்தது.கோவில் வளாகங்களை, உடன்பிறப்புகள் குத்தகைக்கு எடுத்தனர்; வாடகைக்கு எடுத்தனர்; அதற்கான தொகையை, முறையாக செலுத்தினரா என்றால் இல்லை. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளனர்; வசூலிக்க முடியாமல், கோவில் நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது.வருவாய் வரும் கோவில்களை வளைத்து வைத்துள்ள இந்து அறநிலையத் துறை, விளக்கு ஏற்றக் கூட வழியின்றி இருக்கும் ஆயிரக்கணக்கான கோவில்களை, திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.உலக அதிசயமாக கருதப்பட வாய்ப்புள்ள, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், கோவிலை மட்டும் தான் கட்டினான். கோவில் வளாகத்தில் கழிப்பறையை கட்டினானா... இல்லையே!
ஆனால், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் வந்ததும், அவர்கள் செய்த முதல் வேலை, கோவிலை நிர்வகிக்கும் நிர்வாக அலுவலர் நிர்வாகம் செய்ய அலுவலகத்தை கட்டி, கூடவே அதில் கழிப்பறையையும் கட்டி கொண்டனர்.
வருமானம் அதிகம் வரும் கோவில் என்றால், நிர்வாக அலுவலரின் அறையில், 'ஏசி'யும் இருக்கும்.இன்னொரு வேடிக்கையான விஷயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்... இந்து சமய அற நிலையத் துறை, பிரதி மாதமும், 'திருக்கோயில்' என்ற பெயரில் பத்திரிகை வெளியிடுகிறது.
அதற்கான பணம், கோவில் வருவாயில் கிடைப்பது தான். ஆனால், அந்த பத்திரிகைக்கும், 15 ரூபாய் விலை வைத்து, கூடுதல் வருவாய் பார்க்கிறது.சட்டசபையில், இந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட, 'கிப்ட் பேக்'குகள் தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பைகள் ஒவ்வொன்றிலும், தலா, 500 கிராம் சுவீட், காரம், பஞ்சாமிர்தம் இருக்கும்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், கோவில்கள் இருப்பதால் தான், இந்த அனாவசிய செலவு.எனவே, இந்து கோவில்கள் நிர்வாகத்தை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டால் மட்டுமே, கோவில்கள் தழைத்தோங்கும். இதற்கான பணியில், ஹிந்து மதத்தினரும், மத அமைப்புகளும் ஈடுபட வேண்டும்.
கழக உடன்பிறப்புகளின் பிடியிலிருந்து, கோவில்களை மீட்டு, கோவில் வளாகத்திலிருந்து கடைகளை காலி செய்தால் தான், கோவில்கள் தீக்கிரையில் இருந்து தப்பிக்கும்.வழிபாட்டுத்தலம், வழிபடத் தான். வர்த்தகத்திற்கான இடமாக இருக்கக் கூடாது. நடக்குமா... பார்ப்போம்!இ-மெயில்: essorres@gmail.comஎஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-மார்-201815:24:21 IST Report Abuse
Agni Shiva கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. ஹிந்துக்கள் இதோடு மட்டும் நின்று விடாமல் இதை விட அதிகமாக யோசிக்க வேண்டும். தமிழா அரசியல்வாதிகளிடம் தமிழக ஹிந்து கோவில்களை மீட்பது என்பது பெரிய போராட்டமாக அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கவேண்டும். இதற்கு இடையில் ஒரு சில முக்கியமான கோரிக்கையையும் நாம் முன்வைக்க வேண்டும். அதில் முதலாவதாக தமிழக ஹிந்து அறநிலைய துறையை " ஹிந்து மத வளர்ச்சி மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் . இந்துசமயம் காப்பாற்றப்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஹிந்து சமய ஆசிரியர்கள் மூலம் உள்ளூர் மற்றும் வட்டார பள்ளி குழந்தைகளுக்கு ஞாயிற்று மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் வாராந்திர சமய வகுப்புகள், இசை, சமய பாட்டு வகுப்புகள் துவங்கப்படவேண்டும். சமய வகுப்பிற்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு, மற்றும் மதிய உணவு அளிக்க பட வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் மாதம் ஒரு முறை ஹிந்து சமயத்தை பற்றிய கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் போன்றவைகள் நடத்தப்படவேண்டும். கோவில்களின் சார்பாக இலவசமாக அல்லது மிகவும் சலுகை விலையில் அனைத்து ஹிந்து மதநூல்களும், கோவில் தலவரலாறுகள், கோவில் சிறப்புகள், கடவுள்கள், ஹிந்து மத ஞானிகள், மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவர்கள் செய்திருக்கும் அற்புதங்கள், ஹிந்து மத உண்மைகள் போன்றவைகள் சிறு சிறு புத்தங்களாக அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படவேண்டும். மஹாபாரதம், பகவத் கீதை, ராமாயணம் போன்றவைகள் இலவசமாக கொடுக்கப்படவேண்டும். ஹிந்து மதத்தை அந்நிய இறக்குமதி போலி வியாபார மதங்களின் தாக்குதலில் இருந்து அரணாக ஹிந்து வளர்ச்சி மாற்றும் பண்பாட்டு பாதுகாப்பு துறை முன் நிற்கவேண்டும். இதை செய்ய முடியவில்லையென்றால் ஆலயங்களின் பொறுப்பை ஹிந்து இயக்கங்களின் கையில் கொடுத்து விட்டு கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும். ஹிந்துக்கள் இவை அனைத்தையும் மட்டுமின்றி இதை விட மேலாக, கட்டணமில்லா தரிசனம், இலவச இனிப்புகள், குறைக்கப்பட்ட கட்டணங்களில் பிரசாதங்கள், ஹிந்து பள்ளிகள், கல்லூரிகள், ஹிந்து மருத்துவமனைகள், ஹிந்துக்களுக்கான தொழில்கல்விகள், பூஜாரிகளுக்கு தனி குடியிருப்புகள், வசதிகள் விடுதிகள் நிறைந்த வேத பாடசாலைகள் என்று புதிது புதிதாக சாதித்து காட்டுவோம். ஹிந்துக்கள் இணைந்து போராட தயாராக இருப்போம்.
Rate this:
Share this comment
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
24-மார்-201812:02:11 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதிரெண்டூ பேருமே நல்லா எள்தீ வச்சிக்காங்க. பஸூ மாடே இல்லியமா கோவில்ல. ஆபீசர்காரவுங்கல்லம் வந்தூ ஊழல் பண்ணீ போட்டாங்கலாமா. அவங்க கன்னயெல்லம் குத்திவைகோணும் சாமீ....
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
05-மார்-201806:19:07 IST Report Abuse
Rangiem N Annamalai இடை உரத்து யாரும் சொல்வதில்லை .பத்திரிக்கைகள் எழுதுவது இல்லை .எல்லா ஊரிலும் உள்ள கோவில் நிலம் யாருக்கு பட்ட போட்டு உள்ளது ,யார் யார் எவ்வளவு வாடகை பாக்கி கொடுக்க வேண்டும் என எல்லா கோவிலிலும் பிரிண்ட் அவுட் எடுத்து ஓட்ட சொல்லுங்கள் .ஒரு கோவிலில் செய்வார்களா ?.முதுகு எலும்பு என்பது உண்டா ?.பார்க்கிங் டெண்டர் ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் ,பிரசாத டெண்டர் ,கடை டெண்டர் ஹோட்டல் நடத்துவது என அனைத்திலும் காசு பார்த்துவிட்டு கோவில் சிலைகளை திருடி வெளி நாட்டுக்கு விற்பது என எல்லாவற்றிலும் பணம் பண்ணும் துறை தான் பணத்துக்கு கஷ்ட படும் அறநிலையத்துறை .
Rate this:
Share this comment
Cancel
suresh - Cary,யூ.எஸ்.ஏ
23-பிப்-201803:05:39 IST Report Abuse
suresh சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் புரட்சி செய்து கோவில்களை அரசிடம் இருந்து மீட்டு மத பெரியோர்களிடமோ, ஊரில் உள்ள பக்த பெருமக்களிடமோ கொடுக்க வேண்டும். இந்துக்களுக்கும் இந்தியாருக்கும் இழைக்கப்படும் அநீதி தடுக்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
senthil kumar kasinathan - mannargudi,இந்தியா
22-பிப்-201800:27:06 IST Report Abuse
senthil kumar kasinathan திராவிட கவ்வோதிகளை அரசியலில் இருந்தே விரட்டினால் ஒழிய நாம் நினைப்பது போல கோவில்கள் நம் இந்துக்களுக்கு வரவிட மாட்டார்கள் இந்து மக்களுக்கும் கோவில் மீது அக்கறை வேண்டும் திராவிட முன்னேற்ற கழக கட்சி காரர்கள் ஏதாவது அசம்பாவிதம் செய்தால் நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கி கொள்வார்கள் இந்த நிலை மாற வேண்டும் நாத்திகம் பேசும் நாதாரிகளுக்கு ஓட்டு போடாமல் அவர்களை அரசியல் அனாதைகளாக்க வேண்டும். வட இந்தியாவில் இந்துக்கள் இந்து என்ற உணர்வோடு வாழ்கிறார்கள் தமிழ் நாட்டில் அந்த உணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பது வறுத்த பட வேண்டிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
21-பிப்-201808:38:00 IST Report Abuse
spr பொதுவாக பாராட்டக்கூடிய கருத்தாக இருப்பினும், சக்கரை நோயாளிகள் பெருகிவரும் இந்நாளில் "இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் வந்ததும், அவர்கள் செய்த முதல் வேலை, கோவிலை நிர்வகிக்கும் நிர்வாக அலுவலர் நிர்வாகம் செய்ய அலுவலகத்தை கட்டி, கூடவே அதில் கழிப்பறையையும் கட்டி கொண்டனர்." என்பதனால் தவறில்லை ஆலயத்தை அசுத்தப்படுத்தும் நிலை குறையும் ஆனால் பல கழிப்பறைகள் பூட்டியே இருக்கின்றன அந்த அலுவலக அதிகாரிகளுக்கு மட்டுமே பயன்பபடுகின்றன என்பதே வருத்தம் தரும் செய்தி. இத்தனை அக்கிரமங்கள் நடந்தும் அந்த ஆண்டவன் அவர்கள் எவரையும் தண்டிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டு ஒருவருக்கு ஒரு நாத்தீக அன்பர் சொன்னது " இறைவன் முதலில் கல்லால் வடிக்கப்பட்ட சிலையே முறையாக மந்திர உச்சாடனங்கள் செய்து அதற்கு சக்தியேற்றினால் மட்டுமே அது தெய்வமாகவும் ஆனால் இன்று எந்த ஆலயத்தில் முறையான வழிபாடு நடக்கிறது? அங்கிருக்கும் பார்ப்பனன் பூசாரிகளுக்கே இது தெரியும் அங்கிருப்பது வெறும் கல்லென்று அவர்கள்தான் முறையாக பூஜைகள் செய்வதில்லையே எனவேதான் ஆண்டவன் எவரையும் தண்டிக்க முடியவில்லை" என்கிறார் அவர் சொன்னதன் கருத்தை மட்டும் சிந்தியுங்கள் ஆலயத்தில் பூஜைகள் முறைப்படி நடக்கின்றனவா மந்திரங்கள் முறையாகச் செல்லப்படுகின்றனவா பல ஆலயங்களில் அங்கிருக்கும் அர்ச்சகப் பெருமக்கள் கடனே என்று வருமானத்திற்காகவே வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு இது ஒரு காசு பார்க்கும் வழி சொல்லப்போனால் பகுதிநேர வேலை அவர்களின் முழுக்கவனமும் நிலம் மனை வாங்க விற்க என்று செல்கிறதே அதற்கு என்ன சொல்ல.
Rate this:
Share this comment
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
22-பிப்-201818:44:08 IST Report Abuse
Narayanan Sklaxmiமேற்குறிய கட்டுரையை சரியாக படிக்கவும், முதலில் பூஜை செய்வதறகு தேவையான பொருட்களை வழங்கவேண்டும் இவ்ளவுவுதான் என்றுகூறி கட்டாயப்படுத்தி செய்யச்சொன்னால் பூசாரிகள் மட்டும் என்னசெய்வார்கள், அவர்களும் எதுவும் பேசமுடியாமல் குடும்ப பொழைப்பை பார்க்கவேண்டியதுடன் வேறென்ன செய்யமுடியும். முதலில் அகமவிதிப்படி தேவையன்பொருட்களை வயங்கவேண்டும் பிறகு பார்க்கலாம் கடவுளின் பரக்ராமத்தை. அகமம்னா என்னஎன்று தெரியாத ஒருநபர் கட்டுபாட்டில் யிருந்தால் அவளவுதான். எந்த கடவுளும் எனக்கு seiral லைட் போடு என்று கேட்பதில்லை எல்லாம் ஆடம்பர அதிகாரிகள்கொள்ளை அடிக்கத்தான்...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19-பிப்-201813:53:27 IST Report Abuse
Swaminathan Chandramouli அருமையான கட்டுரை எந்த அறிவுரை சொன்னாலும் இந்த வீணாய் போன தமிழக அரசாங்கத்துக்கு செவிடன்காதில் ஊதிய சங்கு தான்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-பிப்-201800:11:17 IST Report Abuse
Nallavan Nallavanஇது தமிழக அரசுக்கான கட்டுரை அல்ல .... நமது விழிப்புணர்வுக்காகத்தான் ..... தவிர கோவில் பகுதிகள் தீக்கிரையாவதற்கும், அயோக்கியர்களின் புகலிடமாக ஹிந்துக்க கோவில்கள் ஆகிவிட்டதற்கும் என்ன சம்பந்தம் ?...
Rate this:
Share this comment
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
06-மார்-201805:27:25 IST Report Abuse
Rangiem N Annamalaiஅரசுதான் கோவிலைகளை கட்டுப்படுத்தும் அறநிலைய துறையை வைத்து கொண்டு உள்ளது.சூடம் ஏற்ற கூடாது என கூறும் நிர்வாகம் ஏன் வெளியில் விற்க அனுமதிக்கிறார்கள் ?.பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்கள் கட்டண கழிப்பிடம் ஏன் கட்ட மாட்டேன் என்கிறார்கள் .அறுபடை வீடுக்கும்,நவகிரக 9 கோவில்களுக்கும் சென்று வாருங்கள் உங்களுக்கு தெரியும்.இவை அனைத்துக்கும் தமிழகம் நோக்கி அனைத்து மக்களும் வந்து ஆக வேண்டும் .நாம் வந்தவர்களிடம் பணத்தை கொள்ளை அடிக்கிறோம் .அவர்கள் எப்படி திரும்ப வருவார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை