விமான ஊழல் புகாருக்கு காரணம் யார்?| Dinamalar

விமான ஊழல் புகாருக்கு காரணம் யார்?

Added : பிப் 17, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
விமான ஊழல் புகாருக்கு  காரணம் யார்?

பிரான்ஸ் நாட்டிலிருந்து, நம் ராணுவத்துக்கு விரைவில் போர் விமானம் வாங்கப்படவுள்ளது. இது தொடர்பான பேரத்தில், ஊழல் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்த பேரம் துவங்கியது. பா.ஜ., ஆட்சி வந்ததும் பிரான்ஸ் நாட்டுடன் இந்த ஒப்பந்தம் உறுதியானது. 'இதில் எக்கச்சக்க ஊழல் நடந்துள்ளது. எங்கள் ஒப்பந்தம் விலை குறைவானது; ஆனால், பா.ஜ., அரசின் ஒப்பந்தத்தால் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது' என, காங்கிரஸ் புகார் கூறி வருகிறது.
இந்த பிரச்னையில், பா.ஜ., தலைவர்கள், தங்கள் கட்சியின் அதிரடி நபர் மீது சந்தேகப்படுகின்றனர். அவர் தான் காங்கிரசுக்கு உதவுகிறாரோ என சந்தேகிக்க துவங்கியுள்ளனர்.
இந்த அதிரடி நபரின் மருமகன், ஒரு இடைத்தரகர். ராணுவ விமானம், தளவாடங்கள் விற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக, இந்தியாவில் தரகராக செயல்படுகிறார்.'ரபேல்' விமானத்தை, பிரான்ஸ் நாடு தயாரிக்கிறது. இதன் போட்டி விமானம்,- 'ஈரோ பைட்டரை' மற்றொரு நாட்டின் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தில் தான், அவரது மருமகன் பணியாற்றுகிறாராம்.
இந்த போர் விமானத்தை நிராகரித்து, ரபேல் விமானத்தை மத்திய அரசு வாங்க முடிவெடுத்து, ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த போட்டியில் தோல்வியடைந்த அந்த நிறுவனம், அந்த அதிரடி நபரின் மருமகன் மூலமாக, ரபேல் விமானம் தொடர்பான ஆவணங்களை காங்கிரசுக்கு கொடுத்து வருகிறதாம். 'இதில் எந்த ஊழலும் இல்லை' என, பா.ஜ., தலைவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அந்த அதிரடி நபரோ, மருமகனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர், பா.ஜ.,வினர். 'அவர் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்தானே; அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா' என, கேட்டால், 'தேன் கூட்டில் கை வைத்தால் என்னாகும்; அதனால்தான் அமைதியாக இருக்கிறோம்' என, பதில் வருகிறது.
'அந்த அதிரடி அரசியல்வாதிக்கும், மூத்த அமைச்சர் ஒருவருக்கும், ஆகாது. அந்த அமைச்சருக்கு நெருக்கமாக உள்ள மற்றொரு மத்திய அமைச்சரின் இமேஜை சீர்குலைப்பதற்காகவே, அவர், இப்படி செய்து வருகிறார்' என, பா.ஜ.,வினர் வருத்தப்படுகின்றனர்.
புகைப்பட அரசியல்
அரசியல்வாதிகளுடன், 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்வது சர்வ சாதாரணம். ஆனால், சில சமயங்களில் சர்ச்சைக்குரிய ஆட்கள் இந்த புகைப்படத்தில் இருந்தால், அரசியல்வாதிகளுக்கு பிரச்னை ஏற்படும்.
கோடிக்கணக்கில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய வைர வியாபாரி, நிரவ் மோடி, அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் ஓடிவிட்டார்.
சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரத்தில், உலக பொருளாதார மாநாடு நடந்தது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார், அப்போது, குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அதில் பிரதமருக்கு பின், நிரவ் மோடி நிற்கிறார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியினர், 'சின்ன மோடிக்கு, பெரிய மோடி உதவியுள்ளார்' என, புகார் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, பா.ஜ.,வினர், 'நிரவ் மோடியை, அரசு அழைத்து செல்லவில்லை; இதற்கும், பிரதமருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என்கின்றனர்.
மேலும், நிரவ் மோடியின் சித்தப்பா, சோக்சியுடன், மஹாராஷ்டிரா காங்., முன்னாள் முதல்வர்கள், அசோக் சவான், பிருத்விராஜ் சவான் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
'இந்த சோக்சியும், தற்போது, வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார். 'மற்றொரு முக்கிய புகைப்படத்தையும் விரைவில் வெளியிடுவோம்' என, பா.ஜ., மேலிடம் கூறி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
27-பிப்-201817:46:50 IST Report Abuse
Ramamoorthy P நீரவ் மோடியின் நகைக்கடையில் மோடி அவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த அன்று இரவு அபிஷேக் சிங்க்வியின் மனைவி ஆறு கோடிக்கு நகைகள் வாங்கி அதில் ஐந்து கோடியை பணமாக கொடுத்திருக்கிறார். நீரவ் ஷாவின் நகைக்கடை திறப்பு விழாவுக்கு ராகுல்ஜியும் கலந்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டு பேசுகிறது இந்த பச்சா.
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
01-மார்-201816:47:55 IST Report Abuse
pradeesh parthasarathyரபில் விமான ஒப்பந்த ஊழல் குறித்து உங்க கருத்து என்ன...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
25-மார்-201810:52:59 IST Report Abuse
Anandan//ரபில் விமான ஒப்பந்த ஊழல் குறித்து உங்க கருத்து என்ன...// அதை பற்றி ஒன்று வாயை திறக்க மாட்டோம் இல்லைனா பொய் மூட்டையை அவிழ்த்து விடுவோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை