உறவுகள் நெருக்கடி; தினகரன் தவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உறவுகள் நெருக்கடி; தினகரன் தவிப்பு

தினகரன், புதிதாக துவக்க உள்ள தனி கட்சியில், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் கோரி, சசிகலாவும், மன்னார்குடி சொந்தங்களும் போர்க்கொடி துாக்கிஉள்ளதால், அவர் தவித்து வருகிறார்.

Dinakaran,Sasikala,புதிய கட்சி,  உறவுகள் நெருக்கடி, தினகரன், தனி கட்சி, சசிகலா,  மன்னார்குடி சொந்தங்கள், எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், தேர்தல்கமிஷன், Relations Crisis,  thani katchi ,  New Party, Mannargudi relatives, MGR amma Dravida Munnetra Kazhagam, Election Commission,


அ.தி.மு.க.,வில், இரு அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னத்தை, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீசெல்வம் தலைமைக்கு, தேர்தல்கமிஷன் ஒதுக்கியது. அந்த உத்தரவை எதிர்த்து, தினகரன் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


அதேநேரத்தில், தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால், புதுக்கட்சி துவக்க, தினகரன் திட்டமிட்டுள்ளார். அந்தக் கட்சிக்கு, 'எம்.ஜி.ஆர்., அம்மா திராவிட முன்னேற்ற கழகம்' என, பெயர் சூட்ட வேண்டும் என்று, அவரின் ஆதரவாளர்கள் விருப்பம்

தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், 'புதிய கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலா பெயரை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும்; உறவுகளுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்' என, திவாகரன் உள்ளிட்ட, மன்னார்குடி சொந்தங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.சசிகலா வாயிலாகவும், தினகரனை வற்புறுத்தி வருகின்றன.


இதுகுறித்து, மன்னார்குடி வட்டாரங்கள் கூறியதாவது: சசிகலா கைதால் ஏற்பட்ட அனுதாபமே, ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றிக்கு உதவியது. 'நமது எம்.ஜி.ஆர்.,' பத்திரிகை மற்றும் ஜெயா, 'டிவி'யின் உதவியோடு தான், தினகரன் வெற்றி பெற முடிந்தது.அதனால், புதிய கட்சி துவங்கும் போது, அதில், இளைஞரணி, மகளிரணி, மாணவர் அணி பதவிகளுக்கு, ஜெயானந்த், கிருஷ்ணபிரியா, விவேக் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என, சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி அளித்தால், ஜாதிக்கட்சி அல்லது குடும்பக் கட்சி என்ற பெயர் உருவாகி விடும். எனவே, தன்னை தவிர, வேறு யாரும் தீவிர அரசியலுக்கு வர
வேண்டாம்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அரசியல் வேண்டாம் என, ஜானகி அம்மாள் ஒதுங்கியதால் தான், ஜெ.,க்கு, இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

Advertisement

அதேபோல, சசிகலாவும், அரசியல் வேண்டாம் என,ஒதுங்கினால் தான், தன் தலைமையிலான கட்சி வெற்றி பெற முடியும். இல்லையேல், தனிக்கட்சி, தஞ்சாவூரை தாண்டி, வேறு எங்கும் போணியாகாது என,தினகரன் கூறி வருகிறார்.


புதிய கட்சியில் உறவு கள் யாருக்கும் பதவி கிடையாது என்றும், திட்டவட்டமாக சொல்லி வருகிறார். ஆனாலும், எங்களின் மன்னார்குடி சொந்தங்கள் விடுவதாக இல்லை.தனிக்கட்சி துவங்கினால், முக்கிய பதவிகள் தர வேண்டும் என, தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். அதனால், கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடாமல், அவர் தள்ளிப் போட்டு வருகிறார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
19-பிப்-201818:41:52 IST Report Abuse

Tamilnesan சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் எல்லாம் அறிக்கை விடுகிறார்கள்.......முதலில் இவர் வேட்பு மனு ஏற்று கொண்டதே மாபெரும் தவறு.........இவர் வெளி நாடு வாழ் இந்தியர், ஆரம்பமே ஆட்டம் கண்டுள்ளது..........இதற்கு TTV எவ்வளவு கோடிகளை கொட்டினாரோ?

Rate this:
JANANI - chennai,இந்தியா
19-பிப்-201817:56:56 IST Report Abuse

JANANIentha support um illa TTV kku..

Rate this:
ram - chennai,இந்தியா
19-பிப்-201817:48:10 IST Report Abuse

ramமன்னார் குடி சொத்து எல்லாத்தையும் அரசுடைமை ஆக்க வேண்டும்

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X