மோசடி செய்வதற்கு உதவும் வைர வியாபாரம்; பின்னணியை தோண்டி எடுக்கும் பணி மும்முரம் Dinamalar
பதிவு செய்த நாள் :
மோசடி செய்வதற்கு உதவும் வைர வியாபாரம்
பின்னணியை தோண்டி எடுக்கும் பணி மும்முரம்

புதுடில்லி: பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வெளிவந்துள்ள நிலையில், மோசடி செய்வதற்கு, வைர வியாபாரம் பெரிய அளவில் உதவி வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பல அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

மோசடி,செய்வதற்கு,உதவும்,வைர,வியாபாரம்,பின்னணியை தோண்டி,எடுக்கும்,பணி,மும்முரம்


பிரபல வைர வியாபாரியான, நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளன என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.


நிரவ் மற்றும் அவரது மனைவி, சகோதரர் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்.நிரவ் மோடி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் செய்த மோசடிகள் குறித்து, ஒரு வாரமாக, தினமும் புதுப் புது செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில், வைர வியாபாரம் என்பது, மோசடிகாரர்களுக்கு பெரிய அளவில் உதவி வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நிரவ் மோசடி குறித்து, சி.பி.ஐ., விசாரித்து

வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து அந்த வங்கியும், ரிசர்வ் வங்கியும் விசாரித்து வருகின்றன. இந் நிலையில், நிரவின் நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்தும், செய்துள்ள மோசடிகள் குறித்தும், 'செபி' எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பு விசாரிக்கிறது.


நிரவின் நிறுவனங்களில் இயக்குனராக உள்ள,மெஹுல் சோக்சியின், 'கீதாஞ்சலி' என்ற வைர நகை நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், செபி விசாரிக்கிறது.இந்த நிலையில், நிரவ் மற்றும் சோக்சி இயக்குனராக உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போலி நிறுவனங் கள் குறித்து, கம்பெனி விவகாரங்கள் துறை விசாரித்து வருகிறது.நிரவ் பல்வேறு நிறுவனங் களின் இயக்குனராக உள்ளார். அதே நேரத்தில், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அவர் இயக்குனராக இல்லை.


இது கம்பெனி விவகாரங்கள் துறைக்கு ஆச்சரித்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 150க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரும் அடிப்படுகின்றன. அது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இதுபோன்ற மோசடியில், வைர வியாபாரத்தில் உள்ள பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. பங்குச் சந்தையிலும், பல மோசடியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.


வைரத்தை மதிப்பீடு செய்வது என்பது சற்று சிரமமானது என்பதால், அதைப் பயன்படுத்தி, இதுபோன்ற நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்குவது உள்ளிட்டவற்றில், மோசடி ஆவணங் களை தாக்கல் செய்து ஏமாற்றி வந்துள்ளன.

Advertisement

மேலும், கறுப்புப் பணத்தை பதுக்குவது, பண மோசடி செய்வது போன்ற வற்றுக்கும், வைர வியாபாரம் உதவி செய்து வந்துள்ளது. சமீப காலத்தில் பல மோசடி வைர வியாபார நிறுவனங்கள் இவ்வாறு சிக்கி உள்ளன. இது தொடர்பாக, பல விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன.


வங்கி புதிய தகவல்வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல வைர, வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர், வெளி நாடு தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடி குறித்து, 'செபி' எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள புதிய ஆவணத்தில் கூறியுள்ளதாவது:வங்கியிடம் வாங்கிய கடனைச் செலுத்தும்படி, நிரவ் மோடி தொடர் புடைய நிறுவனங்கள் மற்றும் கீதாஞ்சலி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், ஜன. 16ம் தேதி பேசினோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201814:31:36 IST Report Abuse

MohanHOW COME A CULPRIT NIRAV MODI KIND OF PEOPLE CAN TAKE A PHOTO EASILY WITH OUR COUNTRY PM. BIGGEST QUESTION MARK JAIHIND

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
19-பிப்-201820:17:32 IST Report Abuse

venkateshகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே என்று சும்மாவா சொன்னாங்க பாருங்க குள்ளமான கள்ளன்

Rate this:
Gopi - Chennai,இந்தியா
19-பிப்-201818:20:42 IST Report Abuse

Gopiநச்சின்னு ஒரே கேள்வி. நீரவ் மோடி இந்திய குடியுரிமை பெறாத வெளிநாட்டில் பிறந்த நபர். இவருக்கு யார் சிபாரிசில் கடன் கொடுக்க பட்டது ? மேலும் இந்தியா பூராவும் எடுத்துக்கொண்டால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களின் விவரங்களை எளிதில் பராமரிக்க முடியும். அவர்களுடைய பல்வேறும் விதமான கோப்புகளை மத்திய துறைகள் கண்காணிக்க முடியும். உண்மை சம்பம் இங்கு உதாரணத்திற்கு ஒரு டீக்கடைக்காரர் ஒரு வங்கியில் கடன் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விஷயம் என்ன என்று திருவியபோது இவர் ஏற்கனவே வேறு வங்கியில் பலகாலம் முன்னர் பெற்ற கடனை திருப்பி தராததே. இது ஆதார் போன்ற ஆவணங்கள் வருவதற்கு பல ஆண்டுகள் முன்னேறி வங்கிகளுக்கிடையே உள்ள "கிரெடிட் ஸ்கோர்" தரவுகள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் இவர்கள் 2011 முதல் வாங்கிய கடனுக்கு ஒருமுறை கூட வட்டி கட்ட வில்லை என்பது எவ்வளவு அப்படம். ஒரு விவசாயீ கடன் தவணையை காட்டவில்லை என்று குண்டர்களை வைத்து அவரை அடித்து அவமானப்படுத்தி அவரிடமிருந்து ட்ராக்ட்டரை பிடுங்கி சென்ற செய்தி நமக்கு ஞாபகம் இருக்கும். இன்னொரு சம்பவத்தில் கேரளாவில் ஒரு பெண் கல்விக்கடன் கிடைக்க நடையாய் நடந்து பின்னர் கிடைக்காமல் போகவே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவமும் நினைவிற்கு வரும். பொதுவாக பலகாலம் வங்கி பரிவர்த்தனை வைத்திருக்கும் தொழில்முனைவோருக்கு வங்கிகளில் ஓவர் டிராப்ட் எனப்படும் OD அக்கவுண்டுகள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க பட்டு. அவர்கள் குடோவுனில் உள்ள சரக்கு மதிப்பு மற்றும் ஆர்டர் பேரில் குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே கடன் அளிப்பர். உதாரணத்திற்கு 30 % மதிப்பிற்கான கடன் தொகை கிடைக்கும். இதை அடைப்பதற்கு முன்னர் வேறு கடன் கிடைக்காது. மேலும் இது குறிகிய காலக்கடன். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிவிடவேண்டும். ஆனால் பஞ்சாப் வங்கியில் நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. திரும்ப பெறும் பணம் அத்தனையும் மத்திய சர்க்கார் பொது கடன் நிதியாக அந்தந்த வங்கியின் கீழ் வைத்து, குறுதொழில் செய்வோர், மகளிர் சுயஉதவிக்குழு, விவசாயிகள், மாணாக்கர்களுக்கு குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடனாக கொடுக்கவேண்டும். இதை கண்டிப்பாக இந்த ஏழைபாழைகள் திரும்ப கட்டுவார்கள். அவர்கள் எந்த வெளிநாட்டிற்கும் தப்பி போகமாட்டார்கள்

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X