மோடி சென்ற விமானத்துக்கு கட்டணம் வசூலித்த பாக்., Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மோடி சென்ற விமானத்துக்கு
கட்டணம் வசூலித்த பாக்.,

புதுடில்லி: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து, ரஷ்யா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர், நரேந்திர மோடி சென்றதற்கு, பாதை பயன்பாட்டு கட்டணமாக, 2.86 லட்சம் ரூபாயை, பாக்., அரசு வசூலித்துள்ளது.


ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் விபரம்:கடந்த, 2016, ஜூன் வரை, பாக்., நேபாளம், பூட்டான், வங்கதேசம், ரஷ்யா, ஈரான் உட்பட, 11 நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர்,மோடி பயணித்து உள்ளார்.

2015, டிச., 25ல், அப்போதைய, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்படி, பாக்.,கில் உள்ள லாகூர் நகருக்கு, பிரதமர் மோடி சென்றார்.


 மோடி, பாகிஸ்தான் , நவாஸ் ஷெரீப், இந்திய விமானப்படை விமானம் ,பிரதமர் நரேந்திர மோடி , பாகிஸ்தான் அரசு,விமான பயண கட்டணம், 
Modi, Pakistan, Indian Air Force aircraft, Prime Minister Narendra Modi, Pakistan government, Nawaz Sharif, airline travel fares,


நவாஸ் ஷெரீப்பை சந்தித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, ரஷ்யா, ஆப்கன் நாடுகளுக்கு மோடி சென்றார். அப்போது, விமான பாதைபயன்பாட்டு கட்டணமாக, 1.49 லட்சம் ரூபாயை, பாக்., அரசு பெற்றுள்ளது. அதேபோன்று, 2016, மே, 22 - 23 தேதிகளில், மோடி பயன்படுத்திய, இந்திய விமான

Advertisement

படை விமானத்தின் பாதை பயன்பாட்டு கட்டணமாக, 77 ஆயிரம் ரூபாயும், 2016, ஜூன், 4 - 6 தேதிகளில், ரூ.59 ஆயித்தை பாக்., அதிகாரிகள் வசூலித்துள்ளனர். இந்த இரு முறையும், பாக்., வான் வழியே, இந்திய விமானப்படை விமானம் பறந்து சென்றது. இவ்வாறு, அந்த பதிலில் கூறப்பட்டுஉள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201810:12:58 IST Report Abuse

pattikkaattaan நாம வரி கட்டுவதே அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நல்லா அனுபவிக்கத்தான்... இத பத்தியெல்லாம் நாம கண்டுக்கிடவே கூடாது... ரேசன்கடையிலே அரிசி சக்கரே எல்லாம் என்னிக்கி போடறான்னு பாத்து, போய் கிவுல நிக்கலாம்... ம்ம் .. நமக்கு வாச்சது அவ்வளுவுதான் ..

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-201814:17:27 IST Report Abuse

தமிழ்வேல் கழுதைக்கு வாக்கப் பட்டா உதைக்கு அஞ்சாக் கூடாது.....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201808:50:02 IST Report Abuse

Srinivasan Kannaiyaமாத சம்பளக்காரர்களுக்கு வரிச்சலுகை தராத நமது பிரதமர் எப்பிடி எல்லாம் பணத்தை மிச்சம் செய்கிறார் பாருங்கள்...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-201814:16:34 IST Report Abuse

தமிழ்வேல் மாத சம்பள வரிப்பணம், பெட்ரோல் தான் டான்னு மணி அடிச்சாப்போல கஜானாவில் வந்து விழுறது. அதிலெல்லாம் கைவைக்க மாட்டாங்க.....

Rate this:
Suresh - Nagercoil,இந்தியா
19-பிப்-201808:34:00 IST Report Abuse

Sureshபொதுவாக விமான நிலையங்களில் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பார்கள் ஆகாயத்தில் பறப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை குறித்து அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்...

Rate this:
suresh - chennai,இந்தியா
19-பிப்-201810:53:14 IST Report Abuse

sureshஒரு தேசத்தின் ஆகாயத்தை கடந்தாலும், ஆகாயம் தானே என்பதல்ல, அதற்கும் கட்டணம் உண்டு, காரணம் அவ்வாறு ஆகாயத்தை கடக்கும் முன் முதலில் அனுமதி கோர வேண்டும், அவர்கள் கேட்கும் நேரம் தேதி பாதை என அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அனுமதி கிடைக்கும் , பின்னர், அந்த விமானத்தை பற்றிய தகவல் அந்த தேசத்தில் இயங்கும் அனைத்து விமான கண்காணிப்பு மையங்களுக்கும் அதன் பாதை பற்றிய தகவல் கொடுக்கப்படும், அந்த விமானம் அந்த தேசத்தின் வான் எல்லையை அடைந்து பின்னர் கடக்கும் வரை விமானம் கண்காணிக்கப்படும், இதற்காக ஓர் தனி துறையே இயங்கி வரும், அதன் நிர்வாக செலவீனங்களுக்காக அனுமதி கோரியவரிடமே வசூலித்து விடுவார்கள்,...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-201814:12:58 IST Report Abuse

தமிழ்வேல் பாதுகாப்பு தருவார்கள்.....

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X