'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'வெளிநாடு வாழ் இந்தியர்கள்
தேர்தல் பிரசாரம் செய்யலாமா?'

புதுடில்லி: 'வெளிநாடுகளில் வசிக்கும், இந்திய வம்சாவளியினர், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் பிரசாரம் செய்வது, 'விசா' விதிகள் அல்லது சட்டத்தை மீறும் செயலா' என, தேர்தல் கமிஷன் எழுப்பியுள்ள சந்தேகத்திற்கு பதில் அளிக்காமல், மத்திய சட்ட அமைச்சகம், மவுனம் காத்து வருகிறது.

Aam Aadmi,Non Resident Indians, election commission,வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் பிரசாரம், இந்திய வம்சாவளியினர்,  தேர்தல் கமிஷன், ஆம் ஆத்மி, மத்திய சட்ட அமைச்சகம், பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்,  election campaign, Indian origin,  AAP, federal law ministry, Punjab assembly election,


விதிமீறும் செயல்


கடந்தாண்டு, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சிக்காக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய

வம்சாவளியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 'இது, விசா விதிகளை மீறும் செயல் ஆகாதா' எனக் கேட்டு, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்எழுதினார்.


இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி, சந்தேகத்துக்கு பதில் அளிக்கும்படி கூறியது. ஆனால், இதுவரை, மத்திய சட்ட அமைச்சகம் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.


இதுகுறித்து, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய வம்சாவளியினர், நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் பிரசாரம் செய்வதுதொடர்பாக, எந்த கட்சியினரும் புகார் அளிக்க வில்லை. இருப்பினும்,பஞ்சாப் மாநில தேர்தல் அதிகாரி சந்தேகம் எழுப்பியதை அடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது.

Advertisement
நினைவூட்டல் கடிதம்:


அங்கு பதில் கிடைக்காததால், சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. பல மாதங்கள் கடந்த பின்னும், சட்ட அமைச்சகமும் பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த விஷயத்தை தெளிவுபடுத்தும் படி, கடந்த மாதம், சட்ட அமைச்சகத்துக்கு, நினைவூட்டல் கடிதத்தை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
19-பிப்-201812:53:39 IST Report Abuse

yilaதேர்தல் செலவை கறுப்பாக்க இப்படி ஒரு வழியா? இதற்காகத்தான், "அந்த" கருப்புப்பணமெல்லாம் அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறதா?

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
19-பிப்-201810:59:25 IST Report Abuse

கைப்புள்ளவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று தொகுதிகள் ஒதுக்கி கொடுக்க படவேண்டும், அங்கு வெளிநாடு வாழ் இந்தியர் மட்டுமே போட்டியிடவேண்டும். கண்டிப்பாக அந்த தொகுதிகள் சிங்கப்பூர் டுபாய் மாறி ஒளிரும்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
19-பிப்-201816:55:20 IST Report Abuse

dandyஏற்கனவே மதுரையை பல கோமாளிகள் சிங்கப்பூர் மாதிரி ஆக்கி விடடார்கள் ..சிங்கப்பூரில் ஒரு பெண் இரவில் கூட தனியாக நடந்து செல்ல முடியும்...

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
19-பிப்-201810:16:31 IST Report Abuse

கைப்புள்ளஇந்தியன் எவனும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவனுக்கு எல்லா உரிமையும் உண்டு. பிரச்சாரம் பண்ணலாம், நிதி கொடுக்கலாம், தேர்தலில் ஓட்டு போடலாம், தேர்தலில் போட்டியிடலாம். வெளிநாட்டுக்காரன் பணம் அனுப்பலேன்னா அப்புறம் உள்ளூர்காரன் எல்லாம் சோத்துக்கு கூட வழி இல்லாம சுத்துவீங்க.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X