பிரதமரை விமர்சித்த ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரதமரை விமர்சித்த
ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம்

'அ.தி.மு.க., அணிகள்இணைப்புக்கு, பிரதமர் மோடியே காரணம்' என்ற, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சர்ச்சைகுரிய பேச்சுக்கும், பிரதமரை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் விமர்சித்ததற்கும், தமிழக, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

 பிரதமரை,விமர்சித்த,ஸ்டாலினுக்கு,பா.ஜ., கண்டனம்


சமீபத்தில், தேனியில் நடந்த, அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது, 'தற்போதைய சூழலில், கட்சியை காப்பாற்ற, நீங்கள் இணைய வேண்டும்; பழனிசாமி அரசில், நீங்கள் இருக்க வேண்டும்; அதற்கு அமைச்சராக வேண்டும் என, பிரதமர் அறிவுறுத்தினார்.'அதனால் தான், அ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு, நான் சம்மதித்தேன்; அமைச்சராக உள்ளேன்' என, கூறினார்.


அவரது பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், சென்னையில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய, தி.மு.க., செயல் தலைவர்,

ஸ்டாலின், 'அ.தி.மு.க. அணிகளை இணைக்க, பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார்' என்றார்.இது, தமிழக பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, மத்தியஅமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், ''பன்னீர்செல்வம் பச்சை குழந்தை அல்ல; பழுத்த அரசியல்வாதி. தமிழக முதல்வராக இருந்த அவர், பிரதமர் கூறியதால் இணைந்தேன் என, கூறியுள்ளது, ஆச்சரியமாக உள்ளது. ''அ.தி.மு.க., தலைவர்கள் பலரிடம், 'நீங்கள் ஏன் சேர்ந்திருக்க கூடாது' என, நான் கேட்டுள்ளேன்; பிரதமர் இதுபோன்று கூறியிருக்க வாய்ப்பில்லை,'' என்றார்.


தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறியதாவது:சாலையில், இருவர் சண்டை போட்டால், அதை பார்க்கும் பெரிய மனிதர், 'சண்டை போடாதீர்கள், சமாதானமாக போங்கள்' என்பார். அப்படித்தான், பிரதமர் மோடியும், துணை முதல்வரை சந்தித்த போது, சாதாரணமாக கூறியிருப்பார்.இதை, அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார் என, ஸ்டாலின் பேசியுள்ளார். பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி தலைவர், பிரதமரை பற்றி இப்படி விமர்சிப்பது அழகல்ல.

Advertisement


ஸ்டாலின் குடும்ப பஞ்சாயத்தே, பெரும்பஞ்சாயத்தாக நடந்து கொண்டிருப்பதால், வீட்டு பஞ்சாயத்து போலவே, நாட்டையும் நினைத்து விட்டார் போலும்.இவ்வாறு அவர் கூறினார்.


'யதார்த்த பேச்சு'


துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேச்சு, அ.தி.மு.க.,விலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ''இரட்டை இலையை மீட்கவே, அ.தி.மு.க. அணிகள் இணைந்தன,'' என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ''துணை முதல்வர் பேசியிருப்பது யதார்த்தமானது. நிர்வாக ரீதியாக, பிரதமர் கூறுவதை நாங்கள் கேட்போம். பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் அரசாங்க ரீதியான உறவு தான் உள்ளது; அரசியல் ரீதியான உறவு கிடையாது,'' என்றார். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-பிப்-201820:11:41 IST Report Abuse

balஇந்த சுடலையை பற்றி அதிகம் பேசி பெரிய ஆளாக்காதீர். ஏற்கனவே சட்டை கிழித்துக்கொண்டு நாடகம் ஆடிய ஆள் இந்த திராவிடன்.

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
19-பிப்-201819:56:33 IST Report Abuse

venkateshசத்தியம் நம்புங்களேன் ஊழலுக்கு முதல் எதிரி ப ஜெ க என்று அதனால் தான் தமிழ்நாடு இன்று ஊழல் சாக்கடையால் நாறி கொண்டு இருக்கு.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-பிப்-201819:46:09 IST Report Abuse

Pugazh Vதிருட்டு கழகம் வரக்கூடாதுன்னு அதிமுக அணிகளை இணைத்தாரா?

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
19-பிப்-201819:31:01 IST Report Abuse

Makkal Enn pakamஉழல ஒழிக்க துப்பில்லை வெட்கம் மானம் இல்லாமல் பேச்சிவேற .....

Rate this:
JANANI - chennai,இந்தியா
19-பிப்-201817:58:11 IST Report Abuse

JANANIstalin ippo yaara thaan vimarsikkama irunthu irukkaaru???

Rate this:
ram - chennai,இந்தியா
19-பிப்-201817:49:34 IST Report Abuse

ramபிஜேபி , திமுக ரெண்டுமே ஒரு fraud கட்சிகள் தான்

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
19-பிப்-201816:54:24 IST Report Abuse

narayanan iyerகை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு? ஆ தி மு க அணிகள் சேர்ந்ததும் , இரட்டை இலையை பெற்றதும் மோடியால்தான் .ஜெயாவின் மரணம் . சசியின் சிறை வாழ்க்கை என்று எதிலும் மோடிதான். யார் சொன்னாதான் என்ன இப்போ . அரசு போய்க்கொண்டு இருக்கிறது

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-201816:38:04 IST Report Abuse

தமிழ்வேல் மரியாதை நிமித்தமாக சென்று பார்த்ததாகவும், அப்போது இணைய கூறியதாகவும், அதற்க்கு இவர் சம்மதித்ததாகவும் பன்னீர் கூறினார். மரியாதை நிமித்தமாக சந்திக்க அப்பாயிண்ட் மென்ட் கேட்டிருப்பார் என்பது நம்ப முடியாதது.. பிரச்னையை தீர்த்து வைக்க பிரதமர் வரச்சொல்லி காதைத் திருகியதுதான் உண்மை. இல்லை என்றால் ரெட்டி ரெயிடு இவர் வீட்டுவரைக்கும் தொடர்ந்திருக்கும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-பிப்-201815:52:37 IST Report Abuse

Endrum Indianஎடுபிடி, வெந்நீர், டமார இசை, இப்பொழுது கஜினி, பம்மல் எல்லாம் தான் டாஸ்மாக் நாட்டின் சங்க நாதம் ???????? நாசமாப்போச்சு இந்த டாஸ்மாக் நாடு.

Rate this:
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
19-பிப்-201815:31:28 IST Report Abuse

அறிவுடை நம்பி மோடி இரு அணிகளையும் இணைக்க கட்ட பஞ்சாயத்து செய்தார் என்பது செவ்வாய் கிரகம் வரை தெரியும்... எல்லாம் பங்கு செய்த மாயம்... வேறென்ன...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement