2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..? | Dinamalar

2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?

Added : பிப் 19, 2018 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
supreme court,population, Family planning,சுப்ரீம் கோர்ட், குடும்ப கட்டுப்பாடு திட்டம்,  மக்கள் தொகை பெருக்கம் , வழக்கறிஞர்கள், வேலையில்லா திண்டாட்டம்,சுற்றுச்சூழல் மாசு, அனுஜ் சக்சேனா, பிருத்விராஜ் சவுகான், பிரியா சர்மா , உச்ச நீதிமன்றம், Family planning program, population growth, lawyers, unemployment, environmental pollution, Anuj Saxena, Prithviraj Chauhan, Priya Sharma,

புதுடில்லி: நாடு முழுவதும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை, கண்டிப்பாக அமல்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் தொகை :

உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர்கள், அனுஜ் சக்சேனா, பிருத்விராஜ் சவுகான், பிரியா சர்மா ஆகியோர் தாக்கல் செய்த பொது நலன் மனுக்கள் விபரம்: மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான புள்ளியியல் தகவல்கள், 2022க்குள், நம் நாட்டு மக்கள் தொகை, 150 கோடியை தாண்டும் என கூறுகின்றன.

வேலையில்லா திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, மோசமான சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாதல் ஆகியவை, மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சில தீய விளைவுகள். இவற்றை, நம் நாடு, தற்போது அனுபவித்து வருகிறது.எனவே, நாடு முழுவதும், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.


நடவடிக்கை:

இதை பின்பற்றுவோருக்கு பரிசு, பின்பற்றத் தவறுவோருக்கு தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பான கொள்கையை வகுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-பிப்-201821:05:11 IST Report Abuse
Kuppuswamykesavan ///....ஜனத்தொகை பெருக்கம் இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்றிவிடும் நம்பர் 1 என்பது வல்லரசு அல்ல வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுகாதாரக்கேடு, குடிநீர் பஞ்சம், தற்கொலை, கொலை கொள்ளை, வழிப்பறி, மோசடி, ஊழல், லஞ்சம், கற்பழிப்பு, விபச்சாரம், கலப்படம், மாசுபாடு, வாழவழியின்மை, விபத்துக்கள், அநியாயம், அதிகார துஷ்பிரயோகம், அனாதைகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், விவாகரத்துக்கள் இவை அனைத்திலும் இந்தியா நம்பர் 1 நாடாக இருக்கும். எல்லா கெடுதல்களுக்கும் அவலங்களுக்கும் காரணம் புழுத்துப்போய் கொண்டிருக்கும் மக்கள் தொகை தான்....///. - இவ்வளவு விசயங்களை மறுக்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
19-பிப்-201815:09:43 IST Report Abuse
Bava Husain மக்கள் தொகையை குறைக்கவேண்டும்தான், மறுப்பதற்கில்லை...ஆனால் அதை "சட்டம்"போட்டு சொல்வதுதான் பிரச்சனை....மக்கள்தொகையால் ஒரு பக்கம் சில குறைகள் இருப்பது உண்மைதான்...ஆனால் நிறைய நிறைகளும் இருக்கிறதே... உதாரணமாக, பாரதி காலத்து, முப்பத்துக்கோடி முகமுடையாளாகவே இப்போதும் இருந்திருந்தால், இதுபோன்றதொரு வளர்ச்சி இருந்திருக்குமா??? அறிவியல் வளர்ச்சி தேவைப்பட்டிருக்குமா??? இன்டர்நெட், மொபைல், விமானம், கப்பல், ரெயில், டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இப்படி இன்றைக்கு சந்தையில் கிடைக்கும்,மக்களுக்கு தேவையான ஏதாவது ஒன்று இருந்திருக்குமா அல்லது அதை உருவாக்க முயற்சிதான் செய்திருப்பார்களா??ஏன் நாம் இப்படி கணினியில் கருத்தை பரிமாறிக்கொண்டிருப்போமா??? மக்கள் தொகை பெருக பெருக, மக்களுக்கு தேவையானதை புதிது புதிதாக கண்டு பிடிக்கிறார்கள்...மக்கள்தொகை இல்லையென்றால் அதற்கு முயற்சிகூட செய்ய மாட்டார்கள்....நம் போக்குவரத்திற்கு கட்டை வண்டி,அல்லது சாரட் வண்டிதான்... என் அப்பா கூற கேட்டிருக்கிறேன், அவர் சிறு வயதில் இருக்கும்போது, உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார்களாம். பணம் கொடுத்தால் கூட அரிசி கிடைக்காதாம். மிகவும் பஞ்சமாம்... பாருங்கள், மக்கள் தொகை குறைந்திருந்த காலத்தில் அரிசி போன்ற உணவுப்பொருட்களுக்கு பெரும் பஞ்சம்... ஆனால் இன்று அரிசியை பாதுகாக்க இடமில்லாமல், புழுத்து போயும்,எலிகள் தின்றும் விரையமாகின்றது...மக்கள் தொகை கூடும்போதுதான் உற்பத்தியும் அதிகரிக்கிறது.... அதனால், எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதுபோல் மக்கள்தொகையிலும் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகள் உண்டு....அதுபோல், எனக்கு தெரிந்து இப்போதெல்லாம் யாரும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதில்லை..இரண்டு அல்லது மூன்றுதான்... எனக்கும்கூட இரு தேவதைகள்தான்....
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
19-பிப்-201813:39:40 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) இந்த கொள்கையை இங்கு கருத்து சொல்லும் சில பிரிவினர் மட்டும் தீவிரமாக எதிர்க்கிறார்கள் . நமது நீர்வளம் குறைகிறது காற்றில் மாசு கூடி விட்டது . இது போன்ற நிலைமையில் ஒரு குழந்தையே அதிகம் .
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
19-பிப்-201813:22:22 IST Report Abuse
Bava Husain தங்கச்சி....என்னம்மா, மந்திரம் சொல்லி, கல்யாணம் பண்ணி வெச்சவங்களுக்கு தான் தண்டனை கொடுக்கணுமா??? கருத்தெல்லாம் நல்லா காமெடியாத்தாம்மா இருக்கு.., ஆனா இந்த காளகேய "கிளிக்கி" மொழியை எல்லாத்துக்கும் புரியவைக்க ஒரு ஆள, ஏற்பாடு பண்ணகூடாதாம்மா....... (மன்னிக்க,சும்மா தமாசுக்கு)
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201813:09:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இது அனைத்திற்கும் தீர்வு பொது சிவில் சட்டம் மட்டுமே , மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு அரசாங்க கட்டிடத்தில் கோவில் இருக்கக்கூடாது என்பது , இந்து பண்டிகை கொண்டாடக்கூடாது என்பது , வழக்கமாக செய்யும் பூமி பூஜை போன்ற சடங்குகளை செய்யக்கூடாது என்பது ஆனால் சட்டத்தில் மட்டும் தனி சட்டம் வேண்டும் என்பது. இதெல்லாம் இந்த காங்கிரஸ் கட்சியால் வந்த பிரச்சினைகள். இதற்கு ஒரே தீர்வு பொது சிவில் சட்டம். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே உரிமை , ஒரே சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
RGK - Dharapuram,இந்தியா
19-பிப்-201812:19:53 IST Report Abuse
RGK இதில் மதம் மற்றும் அரசியல் கலக்க வேண்டாம் . இதை நடைமுறைப்படுத்தினா ல் நம் நாடு வளங்கள் பாதுகாக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
19-பிப்-201811:48:19 IST Report Abuse
Saudi_Indian_tamil இந்தியாவின் ஜனத்தொகை பெருத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட புழுத்துப் போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் வீண் ஜனத்தொகை பெருக்கம் இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்றிவிடும் நம்பர் 1 என்பது வல்லரசு அல்ல வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுகாதாரக்கேடு, குடிநீர் பஞ்சம், தற்கொலை, கொலை கொள்ளை, வழிப்பறி, மோசடி, ஊழல், லஞ்சம், கற்பழிப்பு, விபச்சாரம், கலப்படம், மாசுபாடு, வாழவழியின்மை, விபத்துக்கள், அநியாயம், அதிகார துஷ்பிரயோகம், அனாதைகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், விவாகரத்துக்கள் இவை அனைத்திலும் இந்தியா நம்பர் 1 நாடாக இருக்கும். எல்லா கெடுதல்களுக்கும் அவலங்களுக்கும் காரணம் புழுத்துப்போய் கொண்டிருக்கும் மக்கள் தொகை தான். ஐரோப்பிய நாடுகள் தான் உலகில் பணக்கார மற்றும் மகிழ்ச்சியான நாடுகள் காரணம் வீண் ஜனத்தொகை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Ramana Ramana - kumbakonam,இந்தியா
19-பிப்-201811:45:42 IST Report Abuse
Ramana Ramana தண்டனை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
19-பிப்-201811:41:36 IST Report Abuse
Kaliyan Pillai காசு கொடுத்து ஓட்டு வாங்கும் பிணம் தின்னி அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி நாட்டின் எதிர்காலம் பற்றி என்ன கவலை? கொள்ளையடித்து சொத்து சேர்ப்பது ஒன்றே அவர்களின் குறி. அவர்களை வெறியர்களை விட்டு கடித்து குதறும்படிச் செய்ய வேண்டும்1
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201811:15:44 IST Report Abuse
pattikkaattaan ஆமா இப்போ எல்லாம் குடும்ப கட்டுப்பாடு விளம்பரமே வருவதில்லை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை