செம்மரம் வெட்டச் சென்ற 163 தமிழர்கள் மாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்மரம் வெட்டச் சென்ற 163 தமிழர்கள் மாயம்

Updated : பிப் 19, 2018 | Added : பிப் 19, 2018 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
செம்மரம் கடத்தல், தமிழர்கள், ஆந்திர வனப்பகுதி, ஆந்திர மாநிலம், ஒண்டிமிட்டா ஏரி, தமிழர்கள் மாயம், semmaram smuggling, Tamilan, Andhra forest, Andhra Pradesh, Ontimitta lake, Thamilans ​​missing,

ஆத்தூர் : ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 தமிழர்களின் உடலை போலீசார் மீட்டனர். செம்மரம் வெட்ட வந்த அவர்கள், போலீசார் துரத்திய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த தமிழர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு, அவர்களை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அடையாளம் தெரிந்தது :163 தமிழர்கள் மாயம்

உயிரிழந்தவர்களில் 5 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரை அடுத்த கீழஆவாரையைச் சேர்ந்த முருகேசன் (40), கருப்பணன் (30), கிராங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்(27), தங்கராஜ் (25), முருகேசன்(30), ராமநாதன் (30), வெங்கடேஷன்(27) என தெரிய வந்துள்ளது. இவர்களில் கருப்பணன் மட்டும் திருமணம் ஆகாதவர். இவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள ஏஜன்ட் ஒருவர் மூலம் செம்மரம் வெட்ட சென்றதாக கூறப்படுகிறது.


தமிழர்கள் மாயம் :7 தமிழர்கள் உயிரிழந்துள்ள நிலையில், திருப்பதிக்கு செம்மரம் வெட்டச் சென்ற தமிழகர்கள் குறித்த புதிய திடுகிடும் தகவல் தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ செம்மரம் வெட்ட ரூ.500 முதல் 600 கூலி வழங்கப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 170 தமிழர்கள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் 70 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள். தற்போது சேலம் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலியாகி உள்ள நிலையில், மற்ற 163 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201810:21:13 IST Report Abuse
Swaminathan Nath தவறு யார் செய்தலும் தண்டிக்க வேண்டும், தமிழன் என ஆதரிக்க வேண்டாம், வேறு மாநிலத்திற்கு போய் சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுவது தவறு, கூலி தொழிலாளி என ஆதரிக்க வேண்டாம், திருட்டு ஒரு தொழில் இல்லை,
Rate this:
Share this comment
Cancel
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
20-பிப்-201806:57:03 IST Report Abuse
arumugam subbiah இதற்கெல்லாம் மூல காரணம் அரசின் பாழாய் போன சட்ட திட்டங்கள் மட்டுமே. "இருப்பது எல்லாம் பொதுவாய் போனால் திருடுற அவசியம் இருக்காது" என்பது போல் மத்திய, மாநில அரசுகள் இன்னும் செம்மரங்களை விவசாயிகள் வளர்ப்பதற்கு அனுமதி தராததன் மர்மம் என்ன? விவசாயிகள் பண முதலாளிகள் ஆகிவிடுவார்கள் என்பதாலா? அல்லது விவசாயிகளை இறுதி வரை வறுமையில் வைத்திருந்து வாங்கி கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தன் இழந்து தற்கொலை செய்துகொள்ளவா? வனத்துறையும், வேளாந்துறையும் விவசாயிகளுக்கு அனுமதித்தாலன்றி இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
19-பிப்-201820:33:37 IST Report Abuse
suresh கொள்ளையடிக்க வரும் வட இந்திய கொள்ளையர்களோடு செம்மரம் வெட்டிய தமிழக கூலி தொழிலாளர்களை ஒப்பிட்டு பேசுகின்றனர், ,உயிரை கொன்று கொள்ளையடிக்க வரும் வட இந்திய கொள்ளையர்கள் மரம் வெட்டும் தமிழக கூலி தொழிலாளர்கள் ஒப்பானவர்களா ? பொருள் தேடி வரும் கொள்ளையர்களும் வறுமை மாற செல்லும் தொழிலாளர்களும் ஒன்றா ?
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
19-பிப்-201821:31:51 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)கொள்ளையை நியாயப்படுத்த வேண்டாம் . அப்படி கொள்ளை அடித்து தான் தமிழகத்தில் ஆறு , குளம் ஏறி , வன வளம் எல்லாம் நாசமாகி விட்டது . தண்ணீருக்குப் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டது ....
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
19-பிப்-201821:33:16 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)வறுமை மாற சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்யக் கூடாது . அதை நியாய படுத்தவும் கூடாது . இங்கு வடவர் வந்து லட்சக் கணக்கில் வேலை செய்கின்றனர் . அந்த வேலையை ஏன் செய்யக் கூடாது . எல்லாம் பேராசை தான் காரணம் ....
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
20-பிப்-201806:21:57 IST Report Abuse
jaganஇவன் வெட்டுவதால் தான் கொள்ளையன் கொழிக்கிறான் ...எவனும் மரம் வெட்ட போகவில்லை என்றால் அவன் பிசினஸ் படுத்துடும்...என்னதான் வறுமை என்றாலும் சட்டத்துக்கு எதிரா போனா திட்ட தான் செய்வோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X