பிரதமர் ஜஸ்டினுக்கு அவமதிப்பு? கனடா ஊடகங்கள் கொதிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பிரதமர் ஜஸ்டினுக்கு அவமதிப்பு?
கனடா ஊடகங்கள் கொதிப்பு

புதுடில்லி: முக்கிய தலைவர்கள் இந்தியா வருகை தரும் போது, அவர்களை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்பு அளிக்கும், பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமரை, அவ்வாறு வரவேற்காததற்கு, அந்நாட்டு ஊடகங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

பிரதமர் ஜஸ்டினுக்கு அவமதிப்பு? கனடா ஊடகங்கள் கொதிப்பு

வட அமெரிக்க நாடான, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ருடேவ், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன், அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார்.

கண்டனம்நம் நாட்டுக்கு வருகை தரும், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்களை, விதிகளை மீறி, விமான நிலையத்துக்கு சென்று, அவர்களை கட்டியணைத்து வரவேற்பு அளிப்பது, பிரதமர் மோடியின் பாணி.இஸ்ரேல் பிரதமர்,

பெஞ்சமின் நேதன்யாஹு, சமீபத்தில் இந்தியா வந்த போதும், 2015ல், அமெரிக்க அதிபராக இருந்த, ஒபாமா, இந்தியா வந்த போதும், அவர்களை விமான நிலையத்துக்கு சென்று, கட்டித் தழுவி வரவேற்பு அளித்தார் மோடி.
தற்போது இந்தியா வந்துள்ள, கனடா பிரதமர், ஜஸ்டினை, பிரதமர் மோடி, விமானநிலையத்துக்கு சென்று வரவேற்கவில்லை. பிரதமருக்கு பதில், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும் செல்லவில்லை. விவசாயத் துறை இணை அமைச்சர், கஜேந்திர சிங், கனடா பிரதமரை வரவேற்கச் சென்றார்.
இந்தியா வந்துள்ள கனடா பிரதமருக்கு, 'டுவிட்டரில்' கூட, பிரதமர் மோடி, வரவேற்பு செய்தி வெளியிடவில்லை. இதற்கு, கனடா நாட்டு பத்திரிகைகளும், ஊடகங்களும், கண்டனம் தெரிவித்து செய்திகளை வெளியிட்டு உள்ளன.

மறுப்புகனடாவில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு, அந்நாட்டு அரசு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கனடா பிரதமர், ஜஸ்டின் அமைச்சரவையில், இரு சீக்கியர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். அவர்கள் இருவரும், காலிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக, கனடா பிரதமருக்கு, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், 2017ல், வெளிப்படையாக கடிதம் எழுதி இருந்தார். பஞ்சாபில், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு, கனடா பிரதமர், நாளை செல்ல திட்டமிட்டு உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க, அமரீந்தர் சிங் விருப்பம் தெரிவித்து இருந்தார். அதற்கு, கனடா பிரதமர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காரணங்களால், கனடா பிரதமருக்கு, வழக்கமான உற்சாக வரவேற்பு அளிப்பதை, பிரதமர் மோடி தவிர்த்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம், உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, கனடா பிரதமர் சென்ற போது, அவரை சந்திப்பதை, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் தவிர்த்து விட்டார்.

Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh, Abu Dhabi - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-201816:37:03 IST Report Abuse

Suresh, Abu Dhabiகனடா பிரதமரின் மனைவி காலிஸ்தான் ஆதரவு ஆட்களுடன் போஸ் கொடுப்பதை பார்க்கும்போது நமது பாரம்பரியத்தை மீறி பிரதமர் மோடி செய்தது சரியே என்று தோன்றுகிறது

Rate this:
கோமாளி - erode,இந்தியா
23-பிப்-201815:01:45 IST Report Abuse

கோமாளிஇந்தியா செய்தது சிறிது உறுத்தினாலும் செய்தது சரியே...

Rate this:
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201814:29:00 IST Report Abuse

Mohanhi all...on what basis... our PM not given proper response to CANADA PM.... CANADA IS NOT AN ORDINARY COUNTRY... AND MOREOVER CANADA IS ONE OF THE BEST TO LIVE...COMPARE TO INDIA... MUCH BETTER AND GROWNUP ONE.... THIS IS BECAUSE OF PM OFFICE TEAM...GIVEN MISLEADING INFORMATION TO OUR PM... THAT IS THE REASON..... THIS PM OFFICE COMPLETELY RESTRUCTURED BY PM ONLY SO ENTIRE RESPONSIBILITY FOR MODI AND MODI ONLY RESPONSIBLE FOR THIS AND ALSO NEED TO CHANGE OWN ATTITUDE AND NEED TO COME GLOBALLY TO MEET THE HIGH LEVEL GLOBAL STANDARDS....AND INDIA NEED TO GROW GLOBALLY. JAIHIND

Rate this:
மேலும் 125 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X