'அரசு மூலதனம் குறைந்தால் வங்கி மோசடி தடுக்கப்படும்' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அரசு மூலதனம் குறைந்தால்
வங்கி மோசடி தடுக்கப்படும்'

புதுடில்லி,: 'பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனத்தை, 50 சதவீதத்திற்கும் கீழாக குறைத்தால், மோசடி நடைபெறுவது தடுக்கப்படும்' என, 'அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.

Public Sector Bank, Assocham, PNB, பொதுத் துறை வங்கி, அசோசெம், பஞ்சாப் நேஷனல் வங்கி, மத்திய அரசு, வங்கிச் சேவை, வங்கி மோசடி , அரசு பங்கு மூலதனம் , Punjab National Bank, Central Government, Banking Service, Bank Fraud, Government share capital, Associated Chambers of Commerce and Industry of India,

இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை:பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11,400 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற பொதுத் துறை வங்கிகளில், மோசடி தொடர்கதையாகி வருகிறது. மத்திய அரசு, வங்கிகளை காப்பாற்ற, மக்களின் வரிப் பணத்தை எடுத்து, பங்கு

மூலதனமாக வழங்குகிறது.

தீர்வு காண முடியாத நிலை


இதை, பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மை பங்குதாரர் என்ற வகையில், மத்திய அரசுசெய்தாலும், அதற்கும் ஓர் எல்லை உண்டு.அரசு பணி நீட்டிப்பிற்கான பதவியாகவே, வங்கி உயர் பதவிகள் கருதப்படுகின்றன. இப்பதவியில் உள்ளோரும், நிர்வாகத்தின் பெரும்பாலான மூத்த அதிகாரிகளும், தங்கள் பொன்னான நேரத்தை, சாதாரண பிரச்னையாக இருந்தாலும், அரசு உயரதிகாரிகளின் உத்தரவை பெற்று, செயல்படுத்துவதில் வீணாக்கு கின்றனர்.அதனால், வங்கி நடைமுறைகளில், முக்கிய இடர்ப்பாடுகளுக்கு தீர்வு காண முடியாத நிலைஉண்டாகிறது.

அரசின் பங்கு மூலதனம்இதற்கெல்லாம் ஒரே வழி, வங்கிகளை சுயசார்புடன் செயல்பட விடுவதுதான். பொதுத் துறை வங்கிகளில், அரசின் பங்கு மூலதனம்,

Advertisement

50 சதவீதத்திற்கும் கீழாக குறைக்கப்பட்டால், அவற்றின் நிர்வாகத்திற்கு பொறுப்புணர்வும், கடமையும் அதிகரிக்கும்.தனியார் துறையை போல, வங்கியின் இயக்குனர் குழு, வங்கியின் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கும். அரசு உயரதிகாரிகளின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.தலைமை செயல் அதிகாரியின், பொறுப்பான வழிகாட்டுதல் படி, வங்கி செயல்படும். அப்போது, வங்கிச் சேவையும் மேம்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-பிப்-201820:49:50 IST Report Abuse

Pugazh Vஅரசாங்கத்தையே தனியார் கிட்ட குடுத்தாச்சு.. இனி வங்கிகள் தான் பாக்கி

Rate this:
தலைவா - chennai,இந்தியா
23-பிப்-201818:37:51 IST Report Abuse

தலைவா பரவாயில்லையே .. நியாயமான டவுட்டுதான் வந்திருக்கு....

Rate this:
jagan - Chennai,இந்தியா
20-பிப்-201818:05:18 IST Report Abuse

jaganஇந்திராவால் வங்கிகள் பொது துறை ஆனதே கட்சி காரர்களுக்கு பணம் குடுப்பதற்க்கே.... கட்சி காரன் சிபாரிசு , கட்சிக்காரன் தன் குடும்பத்தார் பெயரில் ஒரு டம்மி கம்பெனி ஆரம்பிப்பது , இல்ல 1 செண்டு நிலம் வாங்கி சிறு விவசாயி ஆவது அப்புறம் அரசே கடன் குடுப்பது (எல்லாம் உள்கை)...அப்போ தான் தேர்தல் போது கொடி காட்டுவான்...மேலும், மத்திய அரசு வங்கிகளை தங்கள் வீடு உண்டியல் (piggy பேங்க் ) போல் பயன் படுத்தலாம்...நஷ்டம் வந்தால் வரி பணம் .. அரசு வாங்கி என்றால் நோக்கமே பழுது எனவே சரி செய்யவே முடியாது ...ஏர் இந்தியா இவர்கள் சென்று வர, பஸ் கம்பெனி உதிரி பாக காசு பார்க்க ....

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
20-பிப்-201817:27:43 IST Report Abuse

r.sundaramஇனிமேல் பொதுத்துறை வங்கிகளை தனியார்வசம் கொடுக்க முடியாது, அது சாத்தியமும் அல்ல. முதலில் அரசுகள் வங்கிகளுக்கு தேவையில்லாத தொந்தரவுகளை தருவதை நிறுத்த வேண்டும். அல்லது அதற்குண்டான கட்டணத்தை பொதுத்துறை வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ், பரஸ்பர நிதியகங்கள், போன்ற வற்றிக்கு வங்கிகள் ஆள் பிடிப்பதை நிறுத்தவேண்டும். மக்களுக்கு இன்சூரன்ஸ் கொடுக்க வேண்டுமென்றால், அதுவும் வங்கிகள் மூலம் செய்வதென்றால் வங்கிகளுக்கு அதற்குண்டான கட்டணத்தை அரசு வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் செய்வதில்லை. பணியாளர்கள் வேலை செய்தால் அதற்குண்டான சம்பளம்? மேலும் கடன்களை கொடுக்கும்படி வங்கிகளை அரசு நிர்பந்தப்படுத்தக்கூடாது. அரசு பட்ஜெட்டில் குறைந்தவட்டியில் கடன் கொடுக்க சொன்னால், மார்க்கெட் வட்டிக்கும் இந்த குறைந்த வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அரசு அதை செய்வதில்லை. இதனால் வங்கி நஷ்டப்படும், அதை ஈடுகட்ட அரசு வங்கிகளுக்கு முதலீடு கொடுக்கிறது. ஆக அரசு வட்டியாகவும், கமிசன் ஆகவும் கொடுப்பதற்கு பதில் முதலீடாக கொடுக்கிறது. வங்கிகள் லாபம் ஈட்ட இந்த மாதிரி பெரியவர்களுக்கு அதிக வட்டியில் கடன்கொடுக்க ஆசைப்படும். மேலும் தன் கை பணத்தை கொடுப்பதற்கு பதில் வங்கி உத்திரவாதமாக கொடுத்தால் கமிசன் கூடுதல் வருமானம். அந்த கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டே இந்த தவறுகள் நடக்கின்றன. ஆசை அதிகமானால் மோசம் போகத்தான் செய்யும். அதுவே இன்றய பி என் பி வங்கியின் நிலை.

Rate this:
jagan - Chennai,இந்தியா
20-பிப்-201818:57:11 IST Report Abuse

jaganஅரசு வட்டி கடை நடத்த தேவையில்லை.....நீங்க சொல்வது எதுவமே செயல்படுத்த முடியாது...

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X