மானிய டூ - வீலர் திட்டம் தடை கோரி வழக்கு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மானிய டூ - வீலர் திட்டம் தடை கோரி வழக்கு

மதுரை:பெண்களுக்கான, தமிழக அரசின், மானிய டூ - வீலர் வழங்கும் திட்டத்திற்கு தடைக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மானிய டூ - வீலர் திட்டம் தடை கோரி வழக்கு


திருச்செந்துார், ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொதுநல மனு:வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில், 'அம்மா டூ -வீலர்' வழங்கும் திட்டத்தை பிப்., 24 முதல், தமிழக அரசு துவக்க உள்ளது.

ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் மதிப்பில்

திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். நடப்பாண்டில், 1 லட்சம் பேருக்கு வழங்க உள்ளனர். இதுவரை, 3..36 லட்சம் பேர் விண்ணப் பித்து உள்ளனர். தமிழக அரசுக்கு, 2016 - 17ல், 61 ஆயிரத்து, 431 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


அரசின் கடன் சுமை, மார்ச்சில், மூன்று லட்சத்து, 14 ஆயிரத்து, 366 கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. மக்கள் உணவு, உடை, வசிப்பிடம், மருத்துவ வசதியின்றி சிரமப்படு கின்றனர். அரசியல் லாபத்திற்காக, மானிய விலையில், டூ - வீலர் வழங்கும் திட்டத்தை, மாநில அரசு துவக்கியுள்ளது.


இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தடை விதிக்க வேண்டும்.ஏற்கனவே, நடைமுறையில் உள்ள இலவச திட்டங்களில் மாறுதல் செய்யவோ, புதி தாக இலவச திட்டங்களை அறிவிக்கவோ தடை

Advertisement

விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். மனு, விரைவில், விசாரணைக்கு பட்டியலிடப்படும்.


மாற்றுத்திறனாளிகள் மனு அரசு பரிசீலிக்க உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்பின் செயலர், நம்புராஜன் தாக் கல் செய்த மனு: ஒரு லட்சம் பெண்களுக்கு, இருசக்கர வாகனங்கள் வழங் கும் திட்டத்தின் கீழ், 4,000மாற்று திறனாளிகள் பயன் பெறுவர். வாகனத்தின் விலையில், மற்றவர்களுக்கு வழங்கும், 50 சதவீத மானி யத்தை விட, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுத லாக, 25 சதவீதம் மானியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மனுவை விசாரித்த, நீதிபதி, ரவிச்சந்திரபாபு, இந்த மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலிக்கும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
22-பிப்-201812:46:08 IST Report Abuse

christமக்களின் அடிப்படை தேவைகளையே இவர்களால் பூர்த்தி செய்ய முடியாத போது இலவச திட்டம் ,மானியம் போன்றவைகள் தேவை இல்லாதது .மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் செயல் .

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
22-பிப்-201805:56:09 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)தேவை இல்லாத ஆணி இது.

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-பிப்-201805:55:37 IST Report Abuse

D.Ambujavalliகட்சி நிதியிலிருந்து பைசா செலவழிக்காமல் மக்கள் வரிப்பணத்தை வாரிவிட்டு ஓட்டு வங்கியில் முதலீடு செய்வதை நிரந்தரமாகவே தடை செய்யவேண்டும்

Rate this:
adithyan - chennai,இந்தியா
22-பிப்-201805:01:10 IST Report Abuse

adithyanபோகும் தருவாயில் இருக்கும் ஆ தீ மூ கா கிடைக்கிறவரையில் சுருட்ட பார்க்கிறது.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
22-பிப்-201803:28:42 IST Report Abuse

அன்புஇதுபோன்ற தேவை இல்லாத ஓட்டுவங்கி இலவச திட்டங்களை தமிழக அரசு நிறுத்தவேண்டும். இவற்றை ஆரம்பித்து வைத்ததே கலைஞர் தான். கலர் டிவி என்று ஆரம்பித்து வைத்து, இந்தியாவையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார். ஏழைகளுக்கு இலவச அரிசி, லேப்டாப், மளிகை சாமான்களை வரவேற்கிறேன். மற்றபடி பணமாக வேண்டுமெனில் கொடுங்கள். ஆனால் இலவச கிரைண்டர், மிக்ஸி, கலர் டிவி, பிரிட்ஜ், செல் போன் போன்ற திட்டங்கள் ஊழலுக்கு தான் வழிவகுக்கும்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
22-பிப்-201801:24:18 IST Report Abuse

ramasamy naickenதமிழ்நாட்டின் மொத்த கடன்கள் அடையும் வரை எந்த இலவச,மானிய திடடம்களையும் அறிவிக்க நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement