எம்.ஜி.ஆர். போல நிறமிருக்கலாம்; ஆனால்...| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எம்.ஜி.ஆர். போல நிறமிருக்கலாம்; ஆனால்...

Added : பிப் 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எம்.ஜி.ஆர். போல நிறமிருக்கலாம்; ஆனால்...

நான் சொல்வது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம், கமல். ஆனால், உங்களை, எம்.ஜி.ஆருடனும், கருணாநிதியுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கீழ்க்கண்ட விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது...
எம்.ஜி.ஆரின் உருவம், வெண்மை நிறம் கொண்டது. பொதுவாக, இந்த நிறத்தில் உள்ளவர்களை, எங்களைப் போல திராவிடர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கறுமை தான், எங்களுக்குப் பிடிக்கும். ஆனால், தான் நடித்த படங்களில், தனி மனித ஒழுக்கத்தைப் பின்பற்றுபவராகவும், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளைக் களைபவராகவும் தன்னை, எம்.ஜி.ஆர்., காட்டிக் கொண்டார். கிட்டத்தட்ட, காமராஜரின் வாழ்க்கையைப் பின்பற்றுபவர் போல!அதுவே, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு, மிக உறுதியான அடித்தளம் இட்டு விட்டது. எங்களைப் போன்ற அன்றாடம் காய்ச்சிகள், அவர் தான், உலகிலேயே மிகச் சிறந்த தலைவர் என்று நம்பி இருந்தோம்; அரசியல் வாழ்க்கையிலும், அவர் அப்படியே நடந்து கொண்டார்.கருணாநிதிக்கு இப்படி நடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஏனெனில் அவர், எங்களைப் போல, திராவிடர்களின் சாயலைக் கொண்டிருந்தார்; எங்களின் மனநிலை புரிந்து, கூட்டங்கள் நடத்தினார். அரசியல் வாழ்க்கையில் மட்டும், அரிதாரம் பூச வேண்டி இருந்தது; அதையும் நன்றாகவே செய்து, வெற்றி பெற்றார்.நீங்கள்... கிட்டத்தட்ட, எம்.ஜி.ஆர்., நிறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அவரைப் போல, கட்சி நடத்தி வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்; அதில் தவறில்லை. ஆனால், எம்.ஜி.ஆரைப் போல, சமூகப் பிரச்னைகளைச் சார்ந்த படங்களில் நீங்கள், பெரும்பாலும் நடித்ததில்லை.உங்களின் புகழைப் பறைசாற்றும் படங்கள் என்னவென்று பார்க்கும்போது, அவர்கள், மன்மத லீலை, பதினாறு வயதினிலே, மீண்டும் கோகிலா, மரோ சரித்ரா, அபூர்வ சகோதரர்கள், கைதியின் டயரி, சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், மகாநதி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என்று நீள்கிறது; அவை அனைத்திலும், உங்களின் நடிப்பை மெய்மறந்து பார்க்க முடிந்ததே தவிர, சமூக மேம்பாட்டுக்கென, நீங்கள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி என, ஒரு சில படங்களிலேயே, சமூக அக்கறை பிரதிபலித்திருக்கிறது.ஆனால், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை மையமாக வைத்தே அமைந்தது. சினிமா முடிந்து, அரசியலுக்குள் அவர் நுழைந்தபோது, கிட்டத்தட்ட, கடவுள் மாதிரியான தோற்றத்தில் தான் அவர் தென்பட்டார். அவருடைய வசீகரப் பேச்சு, ஆளுமைத்திறனைப் பார்த்து, கருணாநிதியை வியந்தார் என்பதே உண்மை.கருணாநிதியுடன் உங்களை இங்கே ஒப்பிட்டுப் பேசவே முடியாது. அவரின் தேன் சொட்டும் அல்லது விஷம் சொட்டும் பேச்சுகள், திராவிட மக்களை உணர்ச்சி பொங்க வைத்தன; அவருக்கு அடிமையாக்கி விட்டன.இந்த இரண்டு விஷயங்களுமே, உங்களிடம் மைனஸ். நேற்று மீனவர்களைக் கட்டிப் பிடித்த பாணி, கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தது.உங்களை குறை கூற விரும்பவில்லை. ஏனெனில், 'பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூன்' என்ற, ஆங்கிலச் சொலவடை உண்டே... அது போல தான் உங்கள் பிறப்பும், வாழ்க்கையும்!பிறந்த சில ஆண்டுகளிலேயே, உயர்தர, நறுமணம் மிக்க சென்ட், லிப்ஸ்டிக், அரிதாரம் என வளைய வந்தவர்களுடன், உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்கி விட்டது; 60 ஆண்டுகளாய், அப்படியே பழகி விட்டீர்கள்.இனி, நிலைமை அப்படி இருக்கப் போவதில்லை. வியர்வை நாற்றத்துடன், ஓடி ஆடி வேலை செய்ய வேண்டிய உங்கள், பி.ஏ., முதல், கடைமட்ட தொண்டர்கள் வரையிலானோரின் நெருக்கத்தில் தான் நீங்கள் பணியாற்ற வேண்டும். அதற்குப் பழகி இருக்கிறீர்களா?இங்கு தான், எம்.ஜி.ஆரை நினைவுகொள்ள வேண்டி இருக்கிறது. அவருடைய இளமைப் பருவம், மிகவும் வறுமை வாய்ந்ததாகவே அமைந்திருந்தது. ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவராக, ஏதாவது ஒரு நாடகக் கம்பெனியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா, கண்ணால் காசைப் பார்க்க முடியாதா என்று ஏங்கித் தவித்த வாழ்க்கை அவருடையது. வயிற்றுப் பசியின் வலியும், வியர்வையின் நாற்றமும் அவருக்குப் பழக்கப்பட்டே இருந்திருக்கின்றன.இவற்றை உணர்ந்திருக்க, இவ்வளவு நாள் பழக்கப்பட்டிருக்கா விட்டாலும், இனி நீங்கள் பழகியாக வேண்டும்; சற்றே உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு இதுநாள் வரை, எதிரியாகவே அமைந்து விட்டன. சரி... இனி, இவை எல்லாவற்றையும் மறப்போம்.கட்சியின் கடைமட்டத் தொண்டரையும் அனுசரித்துப் போக வேண்டிய நேரமிது; மற்ற கட்சியினரின், எடக்கு மடக்குப் பேச்சை, அவர்கள் மனம் நோகாமல் சமாளிக்க வேண்டிய தருணம்; தொண்டர்கள், நிர்வாகிகள் சற்றே ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வரும் நேரத்திலெல்லாம், சினிமா வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றிய, 'பர்பெக்ஷன்' எனும் ஆயுதத்தைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம்; ஒரு வேளை, முதல்வர் நாற்காலி கிடைத்தால், நிர்வாகம், மாநிலத்தின் பாதுகாப்பு ஆகிய இரண்டையும், கண்ணும், கருத்துமாகக் கையாள வேண்டிய கடமை என, பல விஷயங்கள் காத்திருக்கின்றன.அடுத்து வர இருக்கிறார், கண்டக்டராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி, சினிமாவில் ஆட்டோக்காரன், பால்காரன், தாதா போன்ற வேடங்களில் நடித்த உங்கள் நண்பர்... அவரையும் சமாளிக்க வேண்டும்!
முடியுமா உங்களால்... பொறுத்திருந்து பார்ப்போம் நாங்கள்!

வீ.சீனிவாசன், சமூக நல விரும்பிமைலாப்பூர், சென்னை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
13-மார்-201807:35:38 IST Report Abuse
Anandan அப்போ சினிமாவில் நல்ல கறுத்தது சொல்பவனைதான் நாங்கள் நம்புவோம் என்கிற இந்த மன நிலை. மக்களின் மனைவியாதியை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-மார்-201812:45:47 IST Report Abuse
Sridhar சத்தியமாக முடியாது. இவரால் தன மனைவிகளையே கவரமுடியவில்லை ஏன், ஒரு நிலையில், தன் ரசிகர் மன்றங்களையே கலைத்தார். நிறைய கோபப்படுபவர்கள் பொதுவாழ்வில் தாக்குப்பிடிக்க முடியாது கண்டிப்பான குரலோடு கறாரான கொள்கைகளை கூற இவர் ஒன்றும் அண்ணா ஹசாரே யோ காந்தியோ கிடையாது.கேரளாவின் விஜயனிடமும் கேஜ்ரிவாலிடமும் நெருக்கம் காட்டுவதிலிருந்தே இவரின் சிந்தனை ஓட்டங்களின் தடுமாற்றங்கள் தெரிகின்றன. இந்த நாட்டின் பண்பாடுகள் மீதும் கலாச்சாரங்கள் மீதும் மரியாதையை இல்லாமல் இருக்கும் எந்த அரசியல்வாதியும் இனிமேல் இந்தியாவில் கால் ஊன்ற முடியாது. அவற்றில் குறைகள் இருக்கலாம், சிலவை மூடநம்பிக்கைகளாக கூட இருக்கலாம். அவற்றை நேர்த்தியாக களைந்து விட்டு, புதிய நாகரிகங்களை நம் பழைய பெருமைகளோடு ஒருங்கிணைப்பவன் எவனோ அவனே இந்தியாவின் அல்லது தமிழ்நாட்டின் தலைவன் ஆகமுடியும். சினிமாக்காரன் என்கிற கேவலத்தை விட்டுத்தள்ளுங்கள். இந்த ஆளும் ராவுல் காண்டி போல அவ்வப்போது எதோ பேசுகிறான். புரிந்து விஷமத்தனமாக பேசுகிறானா இல்லை புரியாமல் பேசுகிறானா என்பது போகப்போக தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மாதிரியான ஆட்களின் ஆட்டம் எல்லாம் தேர்தல் வரைதான். அப்புறம் சிவாஜி பாக்கியராஜ் டீ ராஜேந்தர் விசயகாந்து போல் ஆகிவிடும். என்ன ஒரே ஒரு கொடுமை என்றால், வெற்றியோ தோல்வியோ சினிமாவில் சம்பளத்தைவிட பத்து மடங்கு பணம் சம்பாதித்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Varuvel Devadas - Roorkee,இந்தியா
07-மார்-201812:51:35 IST Report Abuse
Varuvel Devadas கூத்தாடிகள் இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியும்? இரண்டு கூத்தாடிகளை ஓரங்கட்டிவிட்டு படித்த பண்புள்ளவர்களை தேர்வு செய்வோம். நாடு உருப்படும் .
Rate this:
Share this comment
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
07-மார்-201812:32:02 IST Report Abuse
Balamurugan சுய ஒழுக்கம் இல்லாத கமலிடம் எந்த நல்ல விஷயங்களையும் எதிர் பார்க்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
02-மார்-201813:26:42 IST Report Abuse
Hari Bojan ரஜினி கட்சி ஆரம்பிப்பது கேள்விக்குறியாக இருக்கும் இந்த வேளையில் அதுவும் ஆன்மிகம் தவிர வேறொன்றுமில்லை என்கின்ற நினைப்போடு செயல்பட எண்ணும்பொழுது கமலது அரசியல் பிரவேசம் நன்மையில் முடியுமென்றே நினைக்கவேண்டியிருக்கின்றதே
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
01-மார்-201807:28:15 IST Report Abuse
pollachipodiyan நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்க்ளோ அவர்களை போற்றுவதுதான் பரந்த மனப்பான்மை, வெறுமனே திராவிடத்துக்கு சார்பாக பேசினால், திராவிடர்கள் பேசுபவர்களை போற்றுவார்கள் எனும் எண்ணம் சரியானதா? திராவிடர்களுக்குளே பேதம் இல்லையா? மதுரை ஆதீனம் வீரமணியுடன் பேசுவது இல்லையா? அவர் 30 வருடத்துக்கு முன் சொன்னது" வண்ணங்கள் மாறலாம்- எண்ணங்கள் ஓன்று பட வேண்டும்- அப்பொழுதுதான் நாம் தமிழர்" அது போல நமது வண்ணங்கள் ஏதுவாக இருந்தாலும் நாம் தமிழர். காவேரி உங்களுக்கும் தாய், எங்களுக்கும் தாய். நிறம் கொண்டு பிரிக்கப்பார்ப்பது ஆங்கிலேயரை பின்பற்றுவது போல தெரிகிறது. பாரத தேசத்துக்கு சுதந்திரம் வணங்கி கொடுத்த தலைவர்கள் அனைவரும் பிறந்த வித் சில்வர் ஸ்பூன்தான்.
Rate this:
Share this comment
Cancel
Anandh Palani - toronto,கனடா
22-பிப்-201817:33:41 IST Report Abuse
Anandh Palani கமல் என்ற நடிகர் அரசியலுக்கு வேண்டாம் .பொழப்புக்கு வேற வழியில்லை என்று இங்க வந்திருக்கிறாய் .அரசியல்வாதியாக உன்னிடம் இருக்கும் பிளஸ் ஒன்னு சொல்லு பார்க்கலாம் ?? தனி மனித ஒழுக்கம் இல்லை திமிர் பேச்சு தலை கனம்..போ போ .போன தலைமுறை போல் இல்லை இந்த தலைமுறை ...வந்துட்டான் .இருக்கிற பேரை கெடுத்துக்காம இப்பவே ஓடிடு .ஆரம்பமே அபசகுனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை